Saturday, April 11, 2009

பெண்ணே நீ...,

நீ பிறக்கும் வரை
தாய்க்கு பாரமானாய்....

படிப்பை முடிக்கும் வரை
தந்தைக்கு பாரமானாய்....

கல்யாணம் ஆகும் வரை
காதலனுக்கு பாரமானாய்....

பிள்ளை பிறக்கும் வரை
கணவனுக்கு பாரமானாய்....

இறக்கும் வரை
பெற்ற பிள்ளைகளுக்கு பாரமானாய்...

எறிக்கும் வரை
நால்வருக்கு பாரமானாய்....

உன் சந்ததி உள்ளவரை
சுவற்றுக்கு பாரமானாய்....

இவை பசுமையான பாரங்கள் என்பது
நீ இறந்தபின் தான் தெரிகிறது…..

நிலா


அம்மாவால் அறிமுகபடுத்தபடும் முதல் தோழி