Wednesday, January 1, 2025

புதியதோர் உறவு!

 புதியதோர் உறவு

கிடைத்த நாள் இன்று

பழகி போன
பழைய நினைவுகளை
தாங்கி கொள்ள ஒரு உறவு

பேசி தீரா வார்த்தைகளை
பேசி தீர்க்க கிடைத்த
ஓர் உறவு

கவலைகளை பல
கடந்த பின்னும்
அவைகளை மறக்க செய்து
புதியதாய்  சிலதை
வாரிக்கொடுக்க வந்த
உறவு

மறக்க முடியா
சில நினைவுகள்
பிரிந்து  சென்ற
சில உறவுகள்
புதைந்த
சில உணர்வுகள்
வலிகள் கடத்தி சென்ற
சில தருணங்கள்
சிரிக்க வைத்த 
சில நிமிடங்கள்

கடந்த காலத்தை
பகிர்ந்து கொள்ளவும்
நிகழ்காலத்தை
நடத்தி செல்லவும்
எதிர்காலத்தை
கனவு காணவும்
வந்ததோர்
ஓர் உறவு

உறவுக்கு 
பெயர்
புத்தாண்டு