Wednesday, July 18, 2018

பெண் விடுதலை?!

பதினோரு வயதில்
பனியில் பூத்த ரோஜா பூ போல
இருந்தவளை

சிறுக சிறுக சீரழித்த
கொடூரர்களை என்னவென்று
சொல்ல

இப்படி செய்வான்  என தெரிந்திருந்தால்
அவர்கள் தாய் தான் அவர்களை
பெற்றிருப்பாளா ?

காது கேளாத, வாய் பேசமுடியாத
அவளை தாய் எப்படி
பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் ?
இத்தனை  மாதம் அவளினுள் மாற்றம்
அறியவில்லையே அந்த தாய் !

தாத்தாவாகவும் , மாமாவாகவும்
அண்ணனாகவும் பழக வேண்டிய
மனிதர்கள் மிருகங்களானது எதனால் ?

சட்டம் தன் கண்மூடி கிடப்பது
பாரபட்சமில்லா நீதிவழங்கத்தானே ?
ஆனால் சிலநேரம் குற்றவாளிகள்  தப்பிப்பதை
காணாமல் இருப்பது எதனால் ?

குற்றவாளிகளுக்கு மரணமே தண்டனை
என்றாலும் அந்த பூந்தளிர் தன் வாழும்காலம் யாவும்
இந்நிகழ்வின் எண்ணம் அவளுக்கு நரகமாய் தொடர்ந்திடுமே !

வீட்டினுள் பூட்டிவைத்திருந்த பெண்கள்
இப்போது தான் சிறுக சிறுக பட்டாம்பூச்சி போல
பறக்க தொடங்கிய நேரம்
மீண்டும் சிறைவைக்க யோசிக்கவைக்கும் இந்நிகழ்வுகள்

நள்ளிரவில் உடலில் நகை அணிந்து
என்றொரு பெண் தனிமையில் நடக்கிறாளோ
அன்று தான் சுதந்திரம் என்று காந்தி சொன்னார்

இன்று
தனிமையில் பகலில் கூட பெண் குழந்தைகள்
விளையாட முடியாத கொடூர நிலைமை


என்று தான் கிடைக்குமோ பெண்களுக்கு விடுதலை ?

Thursday, July 5, 2018

நிலா !

என் தாய் தான் உன்னை 
அறிமுகப்படுத்தினாள் என்னிடம்
சோறூட்டுகையில் 

மலைமீது ஏறி மல்லிகை பூ 
கொண்டுவாருவாய் என 

தினம் உன்னை காண்கிறேன் 

யாருக்கு கொடுத்தாயோ அந்த 
மல்லிகைபூவை 
நானறியேன் 

நான் வளர வளர உன்மீதான 
நட்பும் வளர்ந்தது 

மொட்டைமாடியில் உன்னுடன் 

பேசிக்கொண்டிருப்பதே என் 
வேலையாகி போனது 
இரவுகளில் 

வளர்பிறையில் உனை காண்கையில் 

சந்தோசம் தொற்றிக்கொள்ளும் 
தேய்பிறையிலோ சோகமும் 
என்னை சூழ்ந்து கொள்ளும்

சோகமும் மகிழ்ச்சியும் 

கலந்து தான் வாழ்க்கை என 
தினம் தினம் வாழ்ந்து 
உணர்த்திக்கொண்டிருக்கிறாய் 

உன்னை காணாத இருள்நாள் 

நான் என்னை மறக்கின்ற ஒருநாள் 

என் இரவு நேர பயணங்களில் 

அழைக்காமல் என்னுடன் எப்போதும் 
பயணிப்பவள்  நீ 


விஞ்ஞானம் தான் வளர்ந்து 

உன் இடம்தனில் கால் பதித்தாலும் 
என்றும் அன்னாந்து பார்த்து வியக்கும் 
அழகி நீ 

எத்தனை கவிதைகள் தான் 
எத்தனை கவிஞர்கள் தான் 
எழுதினாலும் உனைப்பற்றி 
தீராத அமிர்தமடி நீ 

தினம் தினம் உன்னை ரசித்தாலும் 

தெவிட்டாத இன்பமடி நீ எனக்கு