Thursday, July 5, 2018

நிலா !

என் தாய் தான் உன்னை 
அறிமுகப்படுத்தினாள் என்னிடம்
சோறூட்டுகையில் 

மலைமீது ஏறி மல்லிகை பூ 
கொண்டுவாருவாய் என 

தினம் உன்னை காண்கிறேன் 

யாருக்கு கொடுத்தாயோ அந்த 
மல்லிகைபூவை 
நானறியேன் 

நான் வளர வளர உன்மீதான 
நட்பும் வளர்ந்தது 

மொட்டைமாடியில் உன்னுடன் 

பேசிக்கொண்டிருப்பதே என் 
வேலையாகி போனது 
இரவுகளில் 

வளர்பிறையில் உனை காண்கையில் 

சந்தோசம் தொற்றிக்கொள்ளும் 
தேய்பிறையிலோ சோகமும் 
என்னை சூழ்ந்து கொள்ளும்

சோகமும் மகிழ்ச்சியும் 

கலந்து தான் வாழ்க்கை என 
தினம் தினம் வாழ்ந்து 
உணர்த்திக்கொண்டிருக்கிறாய் 

உன்னை காணாத இருள்நாள் 

நான் என்னை மறக்கின்ற ஒருநாள் 

என் இரவு நேர பயணங்களில் 

அழைக்காமல் என்னுடன் எப்போதும் 
பயணிப்பவள்  நீ 


விஞ்ஞானம் தான் வளர்ந்து 

உன் இடம்தனில் கால் பதித்தாலும் 
என்றும் அன்னாந்து பார்த்து வியக்கும் 
அழகி நீ 

எத்தனை கவிதைகள் தான் 
எத்தனை கவிஞர்கள் தான் 
எழுதினாலும் உனைப்பற்றி 
தீராத அமிர்தமடி நீ 

தினம் தினம் உன்னை ரசித்தாலும் 

தெவிட்டாத இன்பமடி நீ எனக்கு 


No comments: