Monday, April 24, 2017

உழைப்பு !

தோழா ,

குழந்தை பருவம் முதல் ஒவ்வொரு பருவத்திலும் நம் கடின உழைப்பின் அர்த்தம் மாறுகிறது

வீட்டு பாடம் முடிப்பதில் தொடங்குகியது
பள்ளி பருவத்தின் உழைப்பு -நடுநிசியில்
தூங்காமல் அம்மா போட்டு தந்த காப்பியில்
தொடர்ந்தது என் கல்லூரி படிப்பின் உழைப்பு !

வேலைக்கான தேர்விலும் சரி
என் காதலக்குக்கான தேடலிலும் சரி
கரைந்தது என் வாலிபத்தின் கடின உழைப்பு !

அழகான மனைவி அருமையான பிள்ளைகள்
இவர்களுக்குகானது வாழ்க்கையில் மீதியுள்ள
என் கடின உழைப்பு !

தோழா ,
வாழ்க்கை ஒரு ரோஜா செடி போல
முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும்
முல்லை உன் கடின உழைப்பால் உடைத்தால்
நறுமணம் வீசும் மலராகும் உன் வாழ்க்கை

தோழா ,
வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.
அதற்கு அவமானம் தெரியாது,
விழுந்தவுடன் அழுது முடித்து
திரும்பவும் எழுந்து நடக்கும்..!

தோழா ,

கடின உழைப்பின் "பலன்" இன்று இல்லை என்று எண்ணாதே
உன்னிடம் சேர "அது" துடித்துக்கொண்டு தான் இருக்கும் ஆதலால்
உழைப்பை நிறுத்தாதே தோழா .....

வெற்றி நிச்சயம் உன்னை சேருமே தோழா !!



Monday, April 17, 2017

தோழா ,

தோழா ,

உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை
புரிந்து கொள்..!

உனக்கு அவர்களிடம் பேச ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்
ஆனால்
அவர்களிடம் கேட்க நிறைய இருக்கிறது
தெரிந்து கொள் ..!!

நீ மண்ணில் பிறக்கவே வலி தந்த போதும்
தான் மண்ணில் உள்ளவரை நேசிப்பது அவர்கள் தான்
அறிந்துகொள் !

அன்பை உள்ளே வைத்து கொண்டும்
வெளியே எதிரியாய் உனக்கு தெரிவது
அவர்கள் தான்
உன்னை மாற்றி கொள் !!

அன்பையே தோற்கடிக்கும்
அன்பை பெற்றவர்கள் அவர்கள் தான்
கொஞ்சமேனும் திருப்பி தர
கற்றுக்கொள் !!

உயிருடன் உடன் வைத்து கொள்
முதியோர் இல்லம் அனுப்பி கொல்லாதே


அம்மனது அங்கேயும் உன்னை வாழ்த்தும்
ஆனால்
உன் பிள்ளையும் உன்னை சேர்க்கும் அவ்விடம்
மறவாதே !

Saturday, April 15, 2017

திருமணம்

புனிதமான நம் பயணம் தொடங்கும் நாள்
இன்று

இனிதே தொடங்க வேண்டும் நம் இல்லற
பயணத்தை

உன் வெட்கத்தையும் , சந்தோஷத்தையும்
காண போகிறேன் ...

வெங்காயம் கூட வேண்டாம் கண்ணே
நம் சமையல் அறையில் -  உன் கண்ணில்
நீர் வர வைக்கும் என்றால் ...

பத்து  மாதம் தாய் சுமந்தாள் உன்னை
இருவது வருடம் தந்தை சுமந்தார் உன்னை
இனி இருக்கும் வருடம் உன்னை சுமப்பேன்
நான் என் இதயத்தில் அன்பே

செல்ல செல்ல கோபங்கள் இருக்கும்
சின்ன சின்ன சண்டைகள் கடக்கும் -ஆனால்
என் கை  விரல் இடுக்குகள் உன் கை கோர்த்து
என்றும் இருக்கும் உன்னுடன் ....


பிரிக்க முடியாத பந்தம்
தொடரட்டும் நம் பந்தம்
பல யுகங்கள் கடந்தும்

வாழ்வோம் வா

Thursday, April 13, 2017

காதலி !

வளர் பிறை போல மலர்ந்து முழு நிலவாய்
மாறும் என்றிருந்தேன் ஆனால்
அது தேய் பிறை ஆகி அமாவாசை
ஆகி போனதேனோ ?!?!


ஓடையில் விட்ட காகித கப்பல்
கடலை சென்றடையும் என்று எண்ணும்
சிறுவனாய் ஆகி போனேன் நான் !

என் நிழலினின்றி
எனக்கு வேறு துணை இல்லை என்று
உணர்த்திவிட்டாள் அவள் !

அன்பே ,உன்னோடு வாழ நினைத்தேன்
ஆனால்
இன்று கல்லறையில் புதைத்து விட்டாயடி எனை

கடற்கரை மணலில் நாம் நேற்று
நடந்த பாத சுவடுகள் கூட
மாயவில்லை இன்னும்..
ஆனால்  நீயோ !?!!

தவறுகள் செய்திருப்பின் என்னை தண்டித்துவிடு
என்னை விடுதலை செய்துவிட்டு போய் விடாதே
என் அன்பே !!

என் நினைவுகளாவது
வைத்து கொள் உன் இதயத்தில்
அதிகமாய் உன்னை நேசித்தவன் என்று !!

பழகிய காலங்கள் அனைத்தும் கனவுகளாய்
போனதேனோ !

Sunday, April 9, 2017

இவ்வுலகில் பிறந்ததும்
என் தாய் எனக்கு அறிமுகபடுத்தியதாலோ
தாய் மொழி என்றே அழைக்கிறோம் தமிழை ..


தாய்க்கு கொடுக்கும் மரியாதையை
என் தமிழுக்கும் கொடுப்போம் ..

மொழிபெயரையே தம் குழந்தைக்கு
வைக்கும் பாக்கியம் பெற்றவர் நாம்
வேறு மொழிக்கில்லையே இப்பாக்கியம் !?

தமிழன் உலகுக்கு பல கற்று தந்திருக்கிறான்
இன்றும் போராடி கொண்டிருக்கிறான் தன்
இனம் காக்க


எங்கள் தமிழ் உயர்வென்று சொல்லி
பல தலைமுறைகள் கடந்தோம்
வள்ளுவன் இரண்டடியில் சொன்னான்
கம்பனும் , பாரதியும் உலகை அளந்தனர்


வலிக்கையில் அ ஆ
சிரிக்கையில் இ ஈ
காரத்தில் உ ஊ
கோவத்தில் எ ஏ
வெட்கத்தில் ஐ
ஆச்சரியத்தில் ஓ ஒ
வக்கணையில்  
விக்கலில் 

நம்மை அறியாமல் நம்மில்
கலந்து தினமும் வாழ்கிறது தமிழ் ,
தமிழை கற்பை போல காப்போம் நாம்  தோழா ...

Thursday, April 6, 2017

பெண் குழந்தை வரம் தான் !

பெண் குழந்தை வரம் தான் ...
புன்னகையால் நம் கவலைகளை மறக்க
கடவுள் மண்ணுக்கு அனுப்பி வைத்த
வரம்

பெண் குழந்தை வரம் தான் ...
தன் எதிர்காலம் மறந்து
உன் நிகழ்கால மகிழ்ச்சி பற்றி மட்டுமே
சிந்திப்பதால்

பெண் குழந்தை வரம் தான் ...
தனக்கான உணவையும் தன் பிள்ளைகளுக்கு
கொடுத்து தன் பசியாற்றுவதால்

பெண் குழந்தை வரம் தான் ...
அம்மா , அக்கா ,தங்கை ,  மனைவி
உறவுமுறை எது கொண்டு நீ அழைத்தாலும்
அன்புடன் நேசிக்க மட்டும் தெரிவதால்

பெண் குழந்தை வரம் தான் ...
கள்ளி பால் கொடுத்து நீ அழிக்க நினைத்தும்
உன் நலம் காக்க வாழ்வதால் ..

பெண் குழந்தை வரம் தான் ...

வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்ல
வாழ்விலும் தான் !

Monday, April 3, 2017

கண்ணாடி

அவளை பார்த்த பின் தான் தொடங்கியது
உனக்கும் எனக்குமான அந்த பந்தம்

உன் உதவியினால் தான் நான் கண்டேன்
அவளை முதன் முதலில்

அந்தத் பௌர்ணமி நிலவு தன்  நெற்றியில்
பொட்டு வைத்து கொண்டிருந்தாள் உன்னை பார்த்து

அவளை பார்க்க செல்கையில்எல்லாம்  உன்னிடம்
தான் என் எல்லா ஒத்திகையும் நடக்கும்


அவளை முத்தமிட்ட தருணமும்
அவள் தாய்மை அடைந்த தருணமும்
அவள்கவலை கொண்ட தருணமும்
அவள்ஆனந்தமடைந்த தருணமும்

எல்லாம் நான் கண்டது உன் மூலம் தான்

என் வெக்கத்தை அறிந்ததும் நீயே
என் துக்கத்தை அறிந்ததும் நீயே


யார் கண் பட்டதோ உடைத்தது நீ
இறுதியில் மிஞ்சியது துகள்களின்
எண்ணிக்கை அல்ல அதில் நான்
வாழ்ந்த வாழ்க்கை ..


என்றும் நான் அழ நீ சிரித்ததில்லை
இன்றும் நான் அழுகிறேன் உன் நிலை
எண்ணி நீயோ அதனை துகள்களிலும்
அழுகிறாய் என்னுடன் ..

உனை போல உலகில் வேறுண்டோ  என் தோழன்
என் வீட்டு  கண்ணாடியே !!!