Monday, April 3, 2017

கண்ணாடி

அவளை பார்த்த பின் தான் தொடங்கியது
உனக்கும் எனக்குமான அந்த பந்தம்

உன் உதவியினால் தான் நான் கண்டேன்
அவளை முதன் முதலில்

அந்தத் பௌர்ணமி நிலவு தன்  நெற்றியில்
பொட்டு வைத்து கொண்டிருந்தாள் உன்னை பார்த்து

அவளை பார்க்க செல்கையில்எல்லாம்  உன்னிடம்
தான் என் எல்லா ஒத்திகையும் நடக்கும்


அவளை முத்தமிட்ட தருணமும்
அவள் தாய்மை அடைந்த தருணமும்
அவள்கவலை கொண்ட தருணமும்
அவள்ஆனந்தமடைந்த தருணமும்

எல்லாம் நான் கண்டது உன் மூலம் தான்

என் வெக்கத்தை அறிந்ததும் நீயே
என் துக்கத்தை அறிந்ததும் நீயே


யார் கண் பட்டதோ உடைத்தது நீ
இறுதியில் மிஞ்சியது துகள்களின்
எண்ணிக்கை அல்ல அதில் நான்
வாழ்ந்த வாழ்க்கை ..


என்றும் நான் அழ நீ சிரித்ததில்லை
இன்றும் நான் அழுகிறேன் உன் நிலை
எண்ணி நீயோ அதனை துகள்களிலும்
அழுகிறாய் என்னுடன் ..

உனை போல உலகில் வேறுண்டோ  என் தோழன்
என் வீட்டு  கண்ணாடியே !!!

No comments: