Wednesday, July 26, 2017

அவள் நினைவுகள் !

தனியாக பெய்து கொண்டிருக்கிறது
மழை
ஆனால் என்னுடனோ அவள் நினைவுகள்

என் எல்லா பொழுதையும் ஆக்கிரமித்து கொள்கிறாள்
காலையில் தொடங்கும்  குறுஞ்செய்தி முதல் ..

கல்லூரி செல்லும் பேருந்து வந்ததும் தொடங்கும்
உன் புன்னகையுடன்

கல்லூரி வரும் வரை நாம் பேசிய பேச்சுக்கள் ஏராளம்
உணவு இடைவேளை நமக்கு இணைந்து பேச கிடைக்கும் வேளை

ஒன்றாய் அமர்ந்து  பகிர்ந்துண்ட நாட்கள்
இனியும் வாழ்வில் அமையும் என்று எண்ணிய நாட்கள்

மாலையில் தேநீர் குடித்து  இருள் நம்மை சூழும் வரை
பேசி பேசி பிரிவோம் வீடு செல்ல .. அது நிரந்தரம் ஆகும் என
அறியேன் அன்று

மொட்டைமாடியில் நிலவினை கண்டு குறுஞ்செய்தி
துணை கொண்டு பேச மறந்து போனதாய் சொல்லி
பேசினோம் பேசினோம் ..தெரியவில்லை அன்று எனக்கு
அது நிரந்தரம் ஆகாது என

கனவிலும் தொடரும் நம் சந்திப்பு அன்று நாம்
பேசிய திட்டங்கள் யாவும் கற்பனை கொண்டேன்

அது என்றும் கனவாகவே இருக்கும் என  அறிந்திருக்கவில்லை நான்

என்னை உன்னில் இருந்து பிரிக்க காலன் அவன் முடிவு கொண்டிருந்ததை நான் அறிந்திருந்தால் என் உயிரை கொடுத்திருப்பேன் எமனுக்கு

பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம்
கேட்கும் இசை எல்லாம் உன் குரல்
உண்ணும் உணவிலும் உன் சுவை
காற்றின் பரிசத்தில் உன் நினைவு

எல்லாமுமாக நீ இருக்கிறாய்
நான் இன்று நீயாக இருக்கிறேன்

உடம்பில்  உயிர் கொண்டு பலனில்லை
என் உயிர் கொன்று வருகிறேன் உன்னை தேடி

Monday, July 24, 2017

மரம் !

குழந்தையாய் பிறந்து முதியவராய் 
மடியும் இடைப்பட்ட காலம் தான் 
வாழ்க்கை 

துளிர்விடும் இலை  பார்க்க அழகு ,
பாலூட்டி வளரும் குழந்தை 
நீர் ஊற்றி வளரும் இலை 

படிப்பு , வேலை காதல் , உறவு 
சங்கடங்கள் ஏராளம் நமக்கு 
வெயில், புயல்,  சூறாவளி காற்று 
சங்கடங்கள் இலைக்கும் உண்டு 

நீர் ஊற்ற நாம் தவறினாலும் 
காற்றும், நிழலும் தர அது 
மறப்பதில்லை மறுப்பதும் இல்லை 

இலையுதிர் காலம் உனக்கு 
முதியவர்கள் புதியவர்களுக்கு 
வழி விடும் நேரம் 
ஆம் புது உயிர் துளிர் விடும் நேரம் 

உன்னை பற்றி நாங்கள் அதிகம் கவலை 
படுவதில்லை 

மழையின் உதவியால் துளிர்விட்டு 
செடியாகி , மரமாகி , காய், கனி நீ தந்தாலும் 
வெயிலில் நீ நின்று  இளைப்பாற நிழல் 
நீ தந்தாலும் 
நாங்கள்  சுவாசிக்க காற்று நீ தந்தாலும் 

உன்னை அழித்து ஒரு ஆடம்பர வீடு கட்டவே 
நினைக்கும் மனிதர்கள்  நாங்கள் 

வளர்த்த தாய் தந்தையை வயதானதும் 
போற்றி பாதுகாக்காமல் 
முதியோர் இல்லம் அனுப்பும்
மனிதர்களிடம்என்ன எதிர்பார்ப்பது 

உண்ட பழத்தின் எச்சத்தை விதையாக விதைக்கும்
காக்கை குருவிகளின் அறிவு 
மனித நமக்கு இல்லாமல் போனதே !

சுவாசிக்க காற்று இல்லாமல் 
மரணம் உன்னை நெருங்கும் முன் 
விழித்திடுவோம் மனிதா !
வீட்டுக்கு ஒரு செடியேனும் 
வளர்ப்போம் நாளை நம் சந்ததி 
செழித்து வளர்ந்திட 
வா மனிதா !!!

Thursday, July 20, 2017

முதல்காதல்தான்!

சந்தோஷமோ, சோகமோ சரியோ, தவறோ என்னுடைய வாழ்க்கையில் என் முடிவுகளே முடிவாக இருக்கட்டும்
என்றாய்

மண்ணில் புதையும் வரை வடுவோடும்.. வலியோடும்.. முடிந்து போகும் வார்த்தைகள்


வாழ்க்கையில் அனுபவம் ஆயிரம் கற்றுத் தந்தாலும்

முற்றுப்புள்ளி இல்லாமல் கேள்விகள் மட்டும் மனதிற்குள் ஏராளம்...

எதற்க்காக இந்த முடிவு ?


என் அறியாமையின் ஏமாற்றத்தால்

உன் பிரிவை தாங்கிக்கொள்ளும் சக்தியில்லை 

புரிந்து விட்டால் உன்னை பிரிய அனுமதித்திருக்கமாட்டேன்

மறந்து விட நினைத்தாலும்
மறக்க முடியாமல் தவிப்பது என்னவோ வாழ்வின் முதல்காதல்தான்!


Tuesday, July 18, 2017

ஒரு நாள் வாழ்க்கை !

அழகான காலை
அம்மாவின் கையில் தேநீர்
அன்போட எழுப்பி  கொடுத்து விட்டு
சென்றாள்

காக்கைகளின் ரீங்காரம்
ஆம் குயிலும் சிட்டுக்குருவிகளும்
மறைந்து விட்டன நம் விஞ்ஞான வளர்ச்சியை 
கண்டு இப்போது காக்கை மட்டும் துணை உண்டு 

அப்பாவின் அர்ச்சனை தொடங்கி விட்டது
நேரம் ஆகிறது சீக்கிரம் கிளம்பி செல் என

பேருந்தில் ஏறி அலுவலகம் சென்றால்
எனக்காய் எடுத்து வைத்த வேலைகள்
மூழ்கினேன் அதில்

பசி மறந்து நானிருக்க இடை இடையில் அதிகாரியின் திட்டுக்கள் வேறு
தீவிரம் காட்டி முடிக்கையில் நியாபகம் வந்தது
ஒலியின்றி இருக்க செய்த என் தொலைபேசி

எடுத்து பார்க்கையில் அவளிடமிருந்து வந்த அழைப்பை
எடுக்காமல் விட்ட எண்ணிக்கை பத்து
குறுந்செய்தி சொல்லியது இன்று அவள் பிறந்த நாள்
வாழ்த்த  மறந்ததால் உறவு முறிந்தது என

அவளை சொல்லி என்ன குற்றம்
அதிகாரியை சொல்லி என்ன குற்றம்

தலை மேல் கை வைத்து சிறிது உட்கார்ந்தேன்
அலுவலக படிகளில் வீடு செல்ல பிடிக்காமல்

சிறிது கழித்து நடந்து பேருந்தில் ஏறினேன்

ஒருவழியாய் கடைசி இருக்கை இருந்தது 

பயணம் தொடங்க சொல்லி தந்தது வாழ்க்கை பாடம் 

"பேருந்தின் கடைசி இருக்கை போல தான் 
வாழ்க்கை திடீர் திடீர் என்று 
தூக்கி தூக்கி அடிக்கும் "

இதுவும் கடந்து போகும்