Tuesday, July 18, 2017

ஒரு நாள் வாழ்க்கை !

அழகான காலை
அம்மாவின் கையில் தேநீர்
அன்போட எழுப்பி  கொடுத்து விட்டு
சென்றாள்

காக்கைகளின் ரீங்காரம்
ஆம் குயிலும் சிட்டுக்குருவிகளும்
மறைந்து விட்டன நம் விஞ்ஞான வளர்ச்சியை 
கண்டு இப்போது காக்கை மட்டும் துணை உண்டு 

அப்பாவின் அர்ச்சனை தொடங்கி விட்டது
நேரம் ஆகிறது சீக்கிரம் கிளம்பி செல் என

பேருந்தில் ஏறி அலுவலகம் சென்றால்
எனக்காய் எடுத்து வைத்த வேலைகள்
மூழ்கினேன் அதில்

பசி மறந்து நானிருக்க இடை இடையில் அதிகாரியின் திட்டுக்கள் வேறு
தீவிரம் காட்டி முடிக்கையில் நியாபகம் வந்தது
ஒலியின்றி இருக்க செய்த என் தொலைபேசி

எடுத்து பார்க்கையில் அவளிடமிருந்து வந்த அழைப்பை
எடுக்காமல் விட்ட எண்ணிக்கை பத்து
குறுந்செய்தி சொல்லியது இன்று அவள் பிறந்த நாள்
வாழ்த்த  மறந்ததால் உறவு முறிந்தது என

அவளை சொல்லி என்ன குற்றம்
அதிகாரியை சொல்லி என்ன குற்றம்

தலை மேல் கை வைத்து சிறிது உட்கார்ந்தேன்
அலுவலக படிகளில் வீடு செல்ல பிடிக்காமல்

சிறிது கழித்து நடந்து பேருந்தில் ஏறினேன்

ஒருவழியாய் கடைசி இருக்கை இருந்தது 

பயணம் தொடங்க சொல்லி தந்தது வாழ்க்கை பாடம் 

"பேருந்தின் கடைசி இருக்கை போல தான் 
வாழ்க்கை திடீர் திடீர் என்று 
தூக்கி தூக்கி அடிக்கும் "

இதுவும் கடந்து போகும் 

No comments: