Monday, July 24, 2017

மரம் !

குழந்தையாய் பிறந்து முதியவராய் 
மடியும் இடைப்பட்ட காலம் தான் 
வாழ்க்கை 

துளிர்விடும் இலை  பார்க்க அழகு ,
பாலூட்டி வளரும் குழந்தை 
நீர் ஊற்றி வளரும் இலை 

படிப்பு , வேலை காதல் , உறவு 
சங்கடங்கள் ஏராளம் நமக்கு 
வெயில், புயல்,  சூறாவளி காற்று 
சங்கடங்கள் இலைக்கும் உண்டு 

நீர் ஊற்ற நாம் தவறினாலும் 
காற்றும், நிழலும் தர அது 
மறப்பதில்லை மறுப்பதும் இல்லை 

இலையுதிர் காலம் உனக்கு 
முதியவர்கள் புதியவர்களுக்கு 
வழி விடும் நேரம் 
ஆம் புது உயிர் துளிர் விடும் நேரம் 

உன்னை பற்றி நாங்கள் அதிகம் கவலை 
படுவதில்லை 

மழையின் உதவியால் துளிர்விட்டு 
செடியாகி , மரமாகி , காய், கனி நீ தந்தாலும் 
வெயிலில் நீ நின்று  இளைப்பாற நிழல் 
நீ தந்தாலும் 
நாங்கள்  சுவாசிக்க காற்று நீ தந்தாலும் 

உன்னை அழித்து ஒரு ஆடம்பர வீடு கட்டவே 
நினைக்கும் மனிதர்கள்  நாங்கள் 

வளர்த்த தாய் தந்தையை வயதானதும் 
போற்றி பாதுகாக்காமல் 
முதியோர் இல்லம் அனுப்பும்
மனிதர்களிடம்என்ன எதிர்பார்ப்பது 

உண்ட பழத்தின் எச்சத்தை விதையாக விதைக்கும்
காக்கை குருவிகளின் அறிவு 
மனித நமக்கு இல்லாமல் போனதே !

சுவாசிக்க காற்று இல்லாமல் 
மரணம் உன்னை நெருங்கும் முன் 
விழித்திடுவோம் மனிதா !
வீட்டுக்கு ஒரு செடியேனும் 
வளர்ப்போம் நாளை நம் சந்ததி 
செழித்து வளர்ந்திட 
வா மனிதா !!!

No comments: