ஐந்து வயதில் என்னை வளைத்து
அழியாத கல்வியினை புகட்டிய
என் முதல் ஆசிரியை இன்றும்
மனதில் நிற்கிறார்
விளையாட்டில் மோகம் கொண்டு
சுற்றி திரிந்த வயதில் அழுது அடம்பிடித்தும்
சேர்த்து விட்டனர் பள்ளியில்
அம்மையும் அப்பனும் தான் என்னை அறிவர்
அன்பு தருவார்கள் என எண்ணிய என்னை
தன் மார்மோடு அணைத்து கல்வி அமுதம்
ஊட்டியவர் என் ஆசிரியை
பிஞ்சு மனம் அதில் அறிவு நீர்பாய்ச்சி
கை பிடித்து என் தாய் மொழி அரிச்சுவடி
எழுத கற்று தந்தவள் என் ஆசிரியை
சாதி மதம் பாராமல் ஏற்ற தாழ்வு காட்டாமல்
எல்லோருக்கும் ஒரே போல போதிப்பவள் என் ஆசிரியை
பள்ளிக்கூடம் எனும் ஓர் இடத்தில் நீ இருந்தும்
உன்னிடம் படித்து உலகை வலம் வருகிறோம்
நாங்கள் உன்னை சுற்றி
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாணவர்கள்
எல்லோரிடவும் ஒரே போல தான் இருக்கிறது
உன் அணுகுமுறை
கொடுக்க கொடுக்க பெருகும் ஒரே செல்வம்
கல்விச்செல்வம் கொடுத்து கொண்டே இருக்கிறார்
என் ஆசிரியர்
அளவு கடந்து எங்களின் விளையாட்டுக்கள் எல்லை மீறும் போது
எங்களை நல்வழிப்படுத்த தண்டனையும் தருவாய்
பள்ளியின் கடைசி நாள் எல்லாரிடமும் ஒரு கேள்வி கேட்டீர்கள்
படித்து முடித்து என்னவாக ஆசை என்று ?
ஒவ்வொருவரும் கை தூக்கி ஒவ்வொன்று சொன்னோம்
எவரும் சொல்லவில்லை உங்களை போல் ஆசிரியர் ஆவேன் என்று !!
அன்று கனத்த இதயத்துடன் நீங்கள் வீடு சென்றீர்கள் ஆனால்
காரணம் அன்று புரியவில்லை எனக்கு
இன்று புரிகிறது எவ்வளவு மகத்துவம் மிகுந்தது உங்கள் பணி
என்று
மாத பிதா குரு மூவரும் வாழும் தெய்வங்களே !!
--- என் ஆசிரியர்கள் அனைவர்க்கும் சமர்ப்பணம் ---

No comments:
Post a Comment