Sunday, November 26, 2017

என் அண்ணா !

சகோதர சகோதரி பாசம்
நினைத்தாலே நினைவெல்லாம் பாயசம்

தந்தையால் எங்கும் நம்முடன்
வரமுடியாது என்ற காரணத்தால்
படைத்தானோ சகோதரனை இறைவன்

கண்டிப்பில் அவன் என் தந்தை
அரவணைப்பில் அவன் என் தாய்

அவனுக்கு கிடைக்கும் அன்பளிப்பெல்லாம்
தங்கை எனக்காய் எடுத்து வைத்து கொடுப்பான்

உனக்கு அண்ணா !? என்றால் உன் சந்தோஷம் தான்
எனக்கு முக்கியம் என்பாய்

குறும்புகள் நான் செய்ய ஏனோ பழியை நீ
ஏற்று கொள்வாய்
சமத்து பிள்ளையாய் உனக்கான தாயின் அன்பை
நான் பெற்று கொள்வேன் அவள் மடியிலமர்ந்து

நோட்டு புத்தகத்தில் மயிலரிகை மறைத்து வைத்து
கூட்டு போடும் என தூங்காமல் நானிருந்த இரவுகள்
உனக்கும் தெரிந்திருக்கும்

அதனால் தானே
நீயே குட்டி மயிலிறகை என் புத்தகத்தில் வைத்து
அடுத்த நாள் நான் சந்தோஷத்தில் கூச்சிட்டும் நீ மௌனமாக
புன்னகைத்தாய் அண்ணா ..

மணமான நான் மறுவீடு செல்லும் நாள்
சந்தோஷமும் , சோகமும் கலந்து
அண்ணா ! உன் கண்ணின் ஓரத்தில் எட்டி பார்த்த
கண்ணீர் சொல்லும் உன் பாசத்தை

இவ்வுலகில் தாயின் பாசத்திற்கு இணை உண்டோ என்றால்
இணை இல்லை துணை உண்டு என்பேன் நான்

இன்று நீ  என் பிள்ளைகளுக்கு தாய் மாமன்
ஆனால்
என்றும் நீ என் அண்ணா !
அடுத்த பிறவியிலும் நீயே வேண்டும் என் அண்ணா !

No comments: