Tuesday, November 7, 2017

உறவு !

செல்ல பிராணி ஒன்று வளர்த்தேன் -அதை
செல்லம் கொடுத்து வளர்த்தேன் 

செல்லும் இடமெல்லாம் அழைத்தேன் -அதை 
செல்ல பெயரிட்டு அழைத்தேன்

உண்ண உணவும் கொடுத்தேன் வளர வளர
உள்ளத்தில் அன்பும் கொடுத்தேன்

தனிமையின் தோழன் என நினைத்தேன்
உன்னை கண்டபின் என் எண்ணத்தை மறந்தேன்

உன்னுடன் விளையாடிய நாட்கள் நினைத்தேன்
என்றும் எண்ணத்தில் நினைத்து  மகிழ்ந்தேன்

விடுமுறையில் உன்னை பிரிந்தேன்  பாட்டி வீட்டில்  உன்னை
நினைத்து என்  கன்னத்தின் ஓரத்தில் அழுதேன்

மீண்டும் வீடு திரும்பியதும் உன்னை தேடினேன் -உன்னை
காணாமல் என் மனம் வாடினேன்

நீ தொலைந்ததாய் பெற்றோர் சொல்ல கேட்டேன்
சொன்னேன்
உனை காணாமல் இனி உணவு உன்ன மாட்டேன்

உனை தேடுவதாய் வாக்கு ஒன்று தந்தார்கள்
என்னுடன் வீதிக்கு தேடவும் வந்தார்கள்

என் மனம் போல் கதிரவனும் மறைந்தான்
வருண பகவானும் எனோ தேட உடன் வந்தான்

நினைத்தேன்  வருந்தினேன் குடை பிடித்து
விதியை நினைத்து வீதியின் ஓரத்தில் அமர்தேன்

தீடிர் என என் கையில் பழகிய முத்தம் , பழகிய ஸ்பரிசம்
உள்ளம் மகிழ்ந்தது உணர்வு புரிந்தது குடைக்குள் வந்தது

தொலைத்ததாய் நினைத்த உறவு
ஒரு குடையில் இருவரையும் இணைத்த
மழைக்கு நன்றி !

No comments: