அன்றும் சூரியன்
கிழக்கே தான் உதித்தது காதல் கொள்ளும் இவ்வுலகில்
அன்பை கண்டு காதல் கொண்டாள் அவள்
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொண்டு
வீட்டில் வறுமை இருந்தும் என்றும்
அன்பை வறுமை இன்றி வழங்கும்
என் மனைவிசின்னஞ்சிறிய எறும்புக்கும் உழைப்பு தேவை படும்போது
நம் கனவை நினைவாக்க
நமக்கும் தேவை தானே யோசி
என உழைக்க வைத்தவள் அவள்
உளி பட்ட கல்லில் தான்
உருவத்தை காண முடியும் கடின உழைப்பு இருந்தால் தான்
உயர்வை அடைய முடியும் !
என்னும் தாரகமந்திரம் என் தலையணை
மந்திரமாய் தினம் உணர்த்துபவள் இவள்
தீவாளி வரும் நேரம் என் குழந்தை
கேட்ட இனிப்பு மிட்டாயும் ,
என் மனைவிக்கு உடுக்க
கிழியாத ஒரு சேலையும் வாங்க வேண்டும்
என் இதயத்தில் இவர்களை சுமக்கையில்
என் தலையில் சுமக்கும் எதுவும்
எனக்கு பாரமில்லை
No comments:
Post a Comment