Tuesday, August 17, 2021

பேசி பழகிய
நொடி துளிகள் எல்லாம்
முகமூடி இட்டு பழகியதால்
நிஜம் முகம் மறந்தது
எனக்கு

என் மனதினூடே
யுத்தம் ஒன்று நடத்தி
விடை காண எத்தனிகையில்
கேள்வி மறந்தது எனக்கு


இதுவும் கடந்து போகும் என
சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன் 
நான் யாரென அறியாமல்
காண்பவர்களிடம் எல்லாம்
முன்முருவல் கடத்தி


Saturday, July 31, 2021

இறைவா!

 அளவில்லா

அன்பையும்
நேசத்தையும்
புன்னகையையும்
நீங்கள் யாரிடமிருந்தும்
பெற்றிருந்தீர்கள் என்றால்
நினைக்காதீர்
விலகுதல் என்பது
கனவிலிருந்து
விழிப்பது போல
எளிதானதென்று

சிந்திக்காமல்
கிறுக்குகிறேன்
என்
சிந்தனை முழுவதும்
நீயென ஆனா பின்

வசதியாய்
வாழ்கிறேன்
அறை  முழுவதும்
பணம் நிரப்பி அல்ல
என் இதய அறை முழுவதும்
உன் நினைவுகளை நிரப்பி

விழி மூடினால்
சுகமாய் உன் நினைவு
வேறென்ன கேட்டு விட
போகிறேன்
இறைவா!   உன்னிடம் ,
அவள் நினைவுகளையேனும்
விட்டு விடு
என்னிடம்
என்பதை தவிர

Tuesday, July 27, 2021

உன் நினைவுகள்

இன்று வரை 

நான் கிறுக்கிய 

எழுத்துக்கள் எல்லாம் 

கவிதையாய் தெரிவது 

ஏன் எனில் அது உன்னை 

பற்றியே இருப்பதால் 


வெள்ளை காகிதங்கள் 

எல்லாம் வண்ண 

காகிதங்களாய் 

ஜொலிக்கின்றன 

உன்னை பற்றி எழுதுவதால் 


என் பார்வை 

உன்னை காண மறுக்கிறது 

ஆனால் 

என் நாணம் 

உன்னை  காண 

தவிக்கிறது 


நீ பேசும் வார்த்தைகளை விட 

உன் மௌனம் அதிக அர்த்தங்களை 

கடத்துகிறது எனக்குள் 


உன் துடிக்கும் 

இதயமும் 

தவிக்கும் நினைவுகளும் 

எனக்காய் இருக்கவே விரும்புகிறது 

என் மனம் 


எண்ணற்ற 

நட்சத்திரங்களுக்கு இடையில் 

ஒளிரும் நிலவை போல 

உன் நினைவுகள் 

எனக்குள் ஒளிர்கின்றன 


நானும் கூட 

கவிதை எழுதுகிறேனாம் 

அது உனக்காய் அல்ல 

உன்னால் 


நொடியில் உடையும் 

நீர்க்குமிழி போல் அல்லாமல் 

நொடிக்கும் உன்னை நினைக்கும் 

ஓயாத கடல் அலை போன்றது 

எனக்குள் 

உன் நினைவுகள் 


Tuesday, June 8, 2021

அவள் வந்துவிட்டாள்

வண்ண தூரிகையால் 
யார் வரைய துவங்கிய ஓவியமோ 
வானில் "வானவில்" 

அந்தி வானம் 
அவள் வருகையை 
எதிர்நோக்கி 
காத்திருக்க துவங்கின

அவள் வந்தால் 
மலர்களை கேட்பாளோ ?
இல்லை 
மண்ணின் வாசனை நுகர்வாளோ ?
இல்லை 
கடற்கரை காண 
அலைபாய்வாளோ ?

இதோ 
சில்லென்ற காற்று
அவளை அழைத்து வருகிறது 

முதல் துளி எங்கு விழுமோ 
வானம் நோக்கி என் பார்வை 
அவள் வந்துவிட்டாள் 







Wednesday, February 17, 2021

அரைப்பெடல் அடித்து

ஆனந்தமாய் சுற்றிய
காலம்தனில்
அரை வயிறு உண்டாலும்
நிறைந்திருந்தது மனது

உடன் பயணித்து
என் உயர்வில் பங்கெடுத்து
இன்று சாய்வு நாற்காலியில்
அமர்ந்து ஓய்வெடுக்கும்
தந்தையை போல
சுவர் ஓரமாய் சாய்த்து
வைக்கப்பட்டிருக்கிறது
அப்பாவின்
"மிதிவண்டி