தீபஒளித்திருநாள் வருகிறது
பிள்ளையின் கட்டளை வந்தாயிற்று
வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பும் போது
வாங்கிவரவேண்டும் உடன் பட்டாசு
என் பல நாள் உழைப்பு சில வினாடிகளில்
கரியாகும் என தெரிந்தும் வாங்க வேண்டும்
பட்டாசு ..
தன் உடல் முழுவதும் மருந்து கலந்தாலும்
தோல் நிறம் மாறினாலும் , தன் சந்ததி உரு குலைந்தாலும்
தனக்கு தெரிந்த தொழில் என செய்யும் அவனக்காகவேனும்
வாங்க வேண்டும் பட்டாசு ...
மனைவியின் புத்தாடை கனவுகள்
வேண்டுகோளும் வந்தாயிற்று
விடுமுறை நாளில் கடைகளில் ஏறி
இறங்க வேண்டும் அவளுடன்
மனைவிக்காகவேனும் வாங்க வேண்டும் புத்தாடை
வீட்டில் சர்க்கரை நோயுடன் பெற்றோர்
இருந்தாலும் , நமக்கு இனிப்பு பிடிக்கவில்லையென்றாலும்
பக்கத்துக்கு வீட்டுக்கு கொடுக்கவேணும் செய்யவேண்டும்
இனிப்பு பலகாரம்
அசுரனை அழித்து மக்களின் வாழ்க்கையில்
ஓளியேற்றிய என் கடவுள்- இருளில் இருக்கும்
என் வாழ்க்கையிலும் ஒளியேற்றுவார் என்ற
நம்பிக்கையில் ஏற்றவேண்டும் வீட்டில்
"தீபஒளி"
"இருளை நீங்கி எல்லார் வாழ்க்கையிலும்
ஒளி பிறக்க கொண்டாடுவோம் தீபாவளி "

No comments:
Post a Comment