Sunday, February 26, 2017

அரசியல்

மக்களால் மக்களுக்காக
மக்களால் தேர்ந்தெடுக்க படுபவர்கள்
ஆளுவது மக்களாட்சி !

ஓ அதுவும் சரிதான் , இன்று அவர்கள் பெற்ற
மக்களுக்காக மற்றும் அவர்கள் உறவு
மக்களுக்காகவே ஆள்கிறார்கள் !

மக்களோ அவர்களின் உரிமைக்காக
அவர்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்களிடமே
போராடவேண்டியிருக்கிறது ...

கவிதைக்கு பொய் அழகுதான் ஆனால்
அரசியல்வாதிகளுக்கு அல்லவே !

ஓட்டுக்காக பணம் இல்லையேல்
உங்கள் கால்களில் கூட விழுந்து தலை வணங்குவர்
வென்றாலோ நீங்கள் 5 வருடம் அவர்கள் கால் அடியில் ..

தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஓட்டு வாங்கும் கண்ணோட்டம் இருக்கும் வரை 
அரசியல் ஒரு சாக்கடை தான் 

சுத்தம் செய்வோம் இனி வரும் தேர்தலில் ...

Tuesday, February 21, 2017

பெண் !

தொடக்கம் எனக்கும் 
சிரமம் தான் உன்னை போல

எனக்கு வார்த்தை வரவில்லை
உனக்கு இம்மண்ணில் வர வரமில்லை 

நீ பெண்ணென்று அறிந்த நிமிடம்
தொடங்குகிறது உனக்கான போராட்டம் 

கள்ளிப்பால் தொடங்கி பல வழிகள் 
வஞ்சகர்களிடம் -உன் 
அஸ்தமனம் காண ..

தப்பி பிழைத்தாய் ஒருவழியாய் எனில் 
குடும்பம் காக்கும் பொறுப்பு உன் தலையில் 
தம்பிக்கும், அண்ணனுக்கும், அன்னையாய் 
நீ !

உன் சொந்தங்கள் உண்ட பின்னே 
உனக்கு சாப்பாடு -நீ 
உண்டாயோ என கேக்க -மனங்களில் 
தட்டுப்பாடு 

எல்லோர்க்கும் கிடைத்தது போக 
மிச்சமிருந்தால் உனக்கும் பங்குண்டு 

இவை உனக்கு பழகிவிட்டதாலோ என்னவோ 
உனக்கு இவை பிடித்தது போல இருக்கிறாய் 

உன் பிடித்த உடை அணிந்தால் -சொல்லும் 
ஒரு கூட்டம் ஆபாசம் என்று ..
ஆபாசம் பார்ப்பவர்களின் மனத்திலென்று 
அறியாமல் ..

பெண் சக்தி என்று சொன்னாலும் -இல்லை 
பேதை அவள் போதை என சுற்றும் ஒரு கூட்டம் 

பெண் வரம் என்று நினைத்தால் 
நீ ரணம் ஆக யார் காரணம்  ?

பொறுப்பதில் நீ பூமி தாய் தான் 
ஆனால் நினைவில் வைத்துக்கொள் 
வதைப்பதில் நீ பத்ரகாளி !

சினம் கொண்டு இரு -தீய 
மனம் கண்டு அறு  நீயே !

The thing women have yet to learn is nobody gives you power. You just take it. ” 

Monday, February 6, 2017

சொல்வாயா உன் காதலை ?!

பகலை இரவு அழித்தாலும்
இரவை பகல் அழித்தாலும் 
உன்னை என் மனதிலிருந்து 
அழிப்பதில்லை 

நிலவை கண்டதும் சூரியன் 
மறைவது போல் என்னை
கண்டதும் நீ வீட்டினுள் 
மறைவதேனோ ?

அடி பெண்ணே !
உன்னை ஒரு முறை 
பார்த்ததற்கே என் மனம் தவிக்கிறதே ..
தினம் உன்னை  காணாமல் என் மனம் 
 ஏனோ பரிதவிக்கறேதே. !

உன்னிடம் பேச எனக்கு வெட்கம் 
பேசாமல் போனாலோ என் மனதில் 
துக்கம் 

நான் பார்க்கும் பொருளாக
 நீ இருக்கிறாய் 

நான் கேட்கும் இசையாக 
 நீ இருக்கிறாய் 

நான் உணரும் காற்றாக 
நீ இருக்கிறாய் 

எல்லாம் ஆகா நீ இருக்கிறாய் 
ஆனால் 
நான் நானாக இருப்பதில்லை 

காதலை நீ சொல்வாய் என 
நான் காத்திருக்க 
காலங்கள் நமக்காக காத்திருக்க 
மறுப்பதேனோ !

உன் கண்கள் பேசும் வார்த்தைகளை 
உன் உதடுகள் பேச மறுப்பதேனோ 


இதோ உன் வீட்டு வாசலில் 
என் இதயத்தை திறந்து -நீ 
வருவாய் என
காத்திருக்கிறேன் 
சொல்வாயா 
உன் காதலை ?!

Sunday, February 5, 2017

தேடினேன் !

பாசம் என்பதை அறிய
தாயை தேடினேன்
கிடைக்கவில்லை

அறிவு என்பதை அறிய
கல்வியை தேடினேன்
கிடைக்கவில்லை

பணம் என்பதை அடைய
வேலை தேடினேன்
கிடைக்கவில்லை

காதல் என்பதை உணர
காதலியை தேடினேன்
கிடைக்கவில்லை

ஞானம் என்பதை அடைய
ஞானியை தேடினேன்
கிடைக்கவில்லை

தேடியது கிடைக்கவில்லை
தேடாமல் ஒன்று
கிடைத்தது -அது
" மரணம் "