Tuesday, February 21, 2017

பெண் !

தொடக்கம் எனக்கும் 
சிரமம் தான் உன்னை போல

எனக்கு வார்த்தை வரவில்லை
உனக்கு இம்மண்ணில் வர வரமில்லை 

நீ பெண்ணென்று அறிந்த நிமிடம்
தொடங்குகிறது உனக்கான போராட்டம் 

கள்ளிப்பால் தொடங்கி பல வழிகள் 
வஞ்சகர்களிடம் -உன் 
அஸ்தமனம் காண ..

தப்பி பிழைத்தாய் ஒருவழியாய் எனில் 
குடும்பம் காக்கும் பொறுப்பு உன் தலையில் 
தம்பிக்கும், அண்ணனுக்கும், அன்னையாய் 
நீ !

உன் சொந்தங்கள் உண்ட பின்னே 
உனக்கு சாப்பாடு -நீ 
உண்டாயோ என கேக்க -மனங்களில் 
தட்டுப்பாடு 

எல்லோர்க்கும் கிடைத்தது போக 
மிச்சமிருந்தால் உனக்கும் பங்குண்டு 

இவை உனக்கு பழகிவிட்டதாலோ என்னவோ 
உனக்கு இவை பிடித்தது போல இருக்கிறாய் 

உன் பிடித்த உடை அணிந்தால் -சொல்லும் 
ஒரு கூட்டம் ஆபாசம் என்று ..
ஆபாசம் பார்ப்பவர்களின் மனத்திலென்று 
அறியாமல் ..

பெண் சக்தி என்று சொன்னாலும் -இல்லை 
பேதை அவள் போதை என சுற்றும் ஒரு கூட்டம் 

பெண் வரம் என்று நினைத்தால் 
நீ ரணம் ஆக யார் காரணம்  ?

பொறுப்பதில் நீ பூமி தாய் தான் 
ஆனால் நினைவில் வைத்துக்கொள் 
வதைப்பதில் நீ பத்ரகாளி !

சினம் கொண்டு இரு -தீய 
மனம் கண்டு அறு  நீயே !

The thing women have yet to learn is nobody gives you power. You just take it. ” 

No comments: