Sunday, March 26, 2017

விவசாயி

உண்ணும் ஒவ்வோர் அரிசியிலும் உண்ணுபவர் பெயர் 
இருக்குமோ இல்லையோ நிச்சயம் உன் பெயர் இருக்குமே 
எனது அருமை விவசாயியே  !!

மேற்கத்திய கலாச்சாரா உணவை உண்டு பீற்றி கொள்ளும் 
நாம்- ஏனோ நம் பாவம் விவாசியை மறைமுகமாய் 

விவசாயி கடனும் சரி அதன் தள்ளுபடியும் சரி பயன் பெறுவது 
விவசாயி அல்ல பண முதலைகள் மட்டுமே !


தரமான உணவை ஏற்றுமதி செய்து விட்டு கழிவுகளை இறக்குமதி 
செய்யும் நம் அரசியல் வாதியின் பிடியில் அழிகின்றான் அவன் !

அவன் போராடுவது தன் வம்சம் செழிக்க அல்ல 
நம் வம்சம் ஆரோக்கியமாய்  வாழவே 

ஒவ்வொரு வேளை   உணவு உண்ணும்
அவனை நினை !

அவனை நீ புறம் தள்ளினால்  -நீ இறக்கும் போது 
வாய்க்கரிசி போடா கூட அரிசி இருக்காது !

Monday, March 20, 2017

வானவில் ....!!

யார் வரைந்ததோ இந்த அழகான
 ஓவியம் வானில் ..?!!
என் பிரமிப்பு நீங்க நெடும் நேரம் ஆனது
ஒரு நாள் பால்ய வயதில் அதிசயமாய்
வானில் கண்ட வானவில் ....

ஏழு வண்ணம் எப்படி கிடைத்தது தேவர்கள்
கையில் வானில் வானவில் வரைந்திட....

தேவர்கள் நடக்கும் பாதை அது என
என் வீட்டு  பாட்டி சொல்ல வாய் பிளந்து கேட்டிருக்கிறேன்

வாலிப வயதில் யோசிக்கையில் அது
யார் யாருக்கோ அனுப்பிய காதல் மடல்
என தோன்றியது ....

காதல் நிராகரிக்கையில் மறைந்திடும் போலும் !?

இல்லை அது வான மங்கையர்
இட்ட வண்ண கோலமோ ?!


விஞ்ஞானம்  நீ தோன்ற பல காரணம்
சொன்னாலும் இன்றும் என்றும்
உன்னை அதிசயமாய் தான் காண்கிறேன் ...

Monday, March 13, 2017

வாழ்க்கை!

முதல் நாள் பாரத்தோம் அன்றே அறிமுகம் ஆனோம்..!

இரண்டாம் நாள் அன்பில் கலந்தோம்..!

மூன்றாம் நாள் முழுதும் புரிந்தோம்..!

நாளுக்கு நாள் கதைகள் பேசி.!

கேலியிலே பொழுதை கழித்தோம்..!

கிண்டல் செய்து சீன்டி பார்ப்போம்..!

அடிக்கடி சண்டை வரும்..!

ஆனால் பேசாமல் ஒரு நாள் கடந்தது இல்லை !

வாரம் முழுவதும் அலுவலக வேலை 
ஓர் நாள் உன்னுடன் வீட்டிலிருக்க ஆசை  எனக்கு !

வாரம் முழுவதும் வீட்டு  வேலை 
ஓர் நாள் என்னுடன்  இவ்வுலகை ரசிக்க ஆசை உனக்கு !

சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் விளையாட்டாய் 
கடந்தது  நம் காதல் முன் !


நதியில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும் ஒன்றுதான் , இரண்டும் தத்தளித்துக் காெண்டே இருக்கும் கரை சேரும் வரை.

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல!! சிறிய சிறிய சந்தோஷங்களையும்ர சித்துக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை...!!

நாம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்
என் விரல்களின் இடைவெளி
உன் விரல்கள் கோர்க்க
காத்திருக்கிறது
அன்பே வா!

Sunday, March 5, 2017

இசை!

தாய் தான் அறிமுகப்படுத்தினாள்
இசையை முதலில் தன் தாலாட்டினூடே

வாலிப பருவம் அடைந்தவுடன்
அறிமுகமாகியது ஓர் நாள் இரவு
இளையராஜாவின் மெல்லிசை

சுகமும் துக்கமும் என்னுடன்
பகிர்ந்துகொண்டது அவரின் இசை

நான் பயணிக்கும் நேரங்களில் எல்லாம்
என்னுடன் பயணித்தது இசை

தூக்கம் இல்லா இரவுகளில் என்னுடன்
தூங்காமல் கண் விழித்தது இசை

என்னை சுவாசிக்க வைத்தது இசை
என்னை காதலிக்க தூண்டியது இசை
என்னை பிறரை நேசிக்க வைத்தது இசை

இசையின் எழுத்துக்கள் எனக்கு புரிவதில்லை
ஆனால் என் உடல்  புகுந்து ரத்த நாளங்களில்
மாற்றம் செய்தது  கத்தியின்றி

இரவும் பகலும் ,மழையும் வெயிலும்
மாறிக்கொண்டிருக்கலாம்

உனக்கும் எனக்குமான பந்தம்
ஒரு போதும் மாறாதே !

Where words fail, music speaks.

Without music, life would be a mistake