Tuesday, June 27, 2017

தோழி!

மல்லி மலரும் அதிகாலை..
அல்லி மலரும் அந்திவேளை...
இடைப் பட்ட அந்த நேரம்.
நம் சந்திப்பு நடை பெற்ற நேரம்

எத்தனை உறவுகள்
தேடாமல் கிடைத்திருந்தாலும்
தேடிக்கிடைத்த உன்னை
விட்டு செல்ல விரும்பவில்லை
பிரிந்து செல்ல பிடிக்கவில்லை

உன்னைப் போல் ஒரு உறவு
தேடினாலும் கிடைக்காது

நான் ஆண், நீ பெண் என்பதால்
ஊர் சொல்லும் ஓராயிரம் உறவுகள்
நம்மைபற்றி

என்னை பற்றி நீ சிந்திப்பாய் அதிகமாய்
என் கவலையும் சந்தோஷமும் உன்னையும்
தொற்றிக்கொள்ளும் நான் சொல்லாமலே

நம்மை பற்றி ஊர் சொல்லுவது நமக்கு
கவலை இல்லை இருந்தும் உன் எதிர்காலம்
என்னை கவலை கொள்ள செய்கிறது

என்னால் அது சிதைந்தால் தாங்கும் சக்தி எனக்கில்லை
ஆதாலால் சரியோ தவறோ இந்த முடிவு
உன்னை விட்டு விலகி இருக்க

என் நண்பர்களின் பெயரில் என்றும்
முதலில் உன் பெயர் தான் இருக்கும்
என் அன்பு தோழியே !


Monday, June 26, 2017

பணமே !!

உன்னை தேடியே இங்கு பலரின் பயணம்

நீ மட்டும் இல்லை என்றால் பலருக்கு
போராடும் குணம் கூட இல்லாமல் போயிருப்பான்

உனக்கு எல்லாரையும் பிடிக்கும் தான்
ஆனால் உன்னை மட்டும் பிடித்தவருக்கு தான்
யாரையும் பிடிக்காமல் போகிறது

குற்றம் செய்தவன் நீ என்று ஊர் பழி  சொல்லும் உன்மேல்
குற்றமற்றவனாய் நடப்பான் மனிதன் பழி உன் மேல் போட்டு

உனக்கு நண்பன் யார் தெரியாது உனக்கு உறவு யார் தெரியாது
ஆனால் நீ உடன் இருந்தால் தான் இவை இருப்பது அவனுக்கு
தெரிகிறது

இவ்வுலகில்
உன்னால் வாழ்ந்தவர் கதை சொல்லும் கதைகள் ஏராளம்
உன்னால் வீழ்ந்தவர் கதை சொல்லும் கதைகள் தாராளம்

உறவுகள் தொலைத்து நண்பர்கள் தொலைத்து
உணவை தொலைத்து வாழ்வை தொலைத்து
உன்னை தேடி ஒடி சேர்த்தேன் உனை என்னிடம் ...

உடன் வந்தது அழையா விருந்தாளியாய் நீரிழிவு ,
ரத்த அழுத்தம் , நிம்மதியின்மை , தூக்கம் இல்லா இரவுகள்
இருந்தும்

கடைசியில் மரணம் அழைக்கையில் புதைக்கவோ
எரிக்கவோ நீ அருகில் இல்லையெனில்
அநாதை பிணமாய் சைவ அறையில் மூலையில்
ஈக்கள்  மொய்க்க படுத்திருப்பேன் ...

அளவோடு இல்லையெனில் அமிர்தமும் நஞ்சு தான்
அளவோடு உன்னை அணைக்க ஓடுகிறேன்
வா பணமே !!


















Thursday, June 22, 2017

மலர்

இன்று பூக்கும் மலர் போல நான்
மொட்டாய் இருக்கையில்
யோசித்ததுண்டு எங்கு செல்வேன் நான் என்று

கோவிலில் அனைவரும் வணங்கும்
கடவுளின் கழுத்தில் மாலையாகவா ?

இல்லை கோவிலின் வெளியில் நிற்கும்
வண்டிகளின் முன் அலங்கார பொருளாகவா ?

இல்லை அழகானே பெண்ணின் கூந்தலிலா ?
இல்லை அன்பான அம்மா அவள் பிள்ளையின்
தலை வாரி பூச்சூட போகிறாளோ ?

இல்லை பணி காலம் முடிந்து பிரியா விடை
பெறும் அவரின் கழுத்திலா ? இல்லை
உயிர் பிரிந்து கிடக்கும் ஒருவரின் சடலத்திலா ?

யோசித்து யோசித்து பூவாய் பூத்தும் பறிக்க படாமல்
கருகி போனேன் முதிர் கன்னிபோல்


மலர்













Friday, June 16, 2017

பணமே!

பிறக்கவும் பிறந்த பின் வாழவும்
வாழ்ந்த நாளில் சாகாமல் இருக்கவும் ,
நீ தேவை

இறந்தபின்னும் உன் தேவை இருக்கத்தான்
செய்கிறது

ஜாதி, மதம், ஆண் ,பெண் பேதம்
உன்னில் நான் கண்டதில்லை

சுத்தம் உனக்கு ஒரு பொருட்டல்ல
கோவிலில் கடவுளின் மடியிலும்
நீ இருப்பாய்

குப்பை அள்ளுபவரின் கையிலும் நீ
தவழ்வாய்
வேறுபாடு உன்னில் நான்
கண்டதில்லை

மனிதனின்  வெற்றியும் தோல்வியும்
உன்னை வைத்தே
தீர்மானிக்கிறார்கள்

உன்னை போதும் என்று சொல்பவர்
தேடினாலும் இம்மண்ணில் காண்பது
அரிது

உன்னால் உறவை தொலைத்தோர் பலர் 
உன்னால் உயிரை தொலைத்தவர் பலர் 
இருந்தும் நீ உடன் இருந்தால் மகிழ்வர் 


மூன்றேழுத்தை தேடி மூச்சிரைக்க 

ஓடுகிறேன் எங்கிருக்கிறாய்  நீ 
பணமே! 

Tuesday, June 13, 2017

அண்ணன் !

வெவ்வேறு நாளில் தான் பிறந்தோம்

எனக்குமுன் பிறந்து என் வருகைக்காக
காத்திருந்தவன் நீ

பள்ளிப்பருவம் அதில் சிறகடித்து பறந்தோம் நாம்

மயில் இறகை நோட்டுக்குள் வைத்து அது குட்டி போடும் என
என்னை நம்ப வைத்து நான் உறங்காமல் காத்திருக்க

மறுநாள் எனக்கு தெரியாமல் நான் ஏமாற கூடாதென
அதில் இன்னொமொரு மயிலிறகை வைத்தவன் நீ

வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்ட
சொல்லி தந்தவன் நீ

நீ படித்த புத்தகம் அதனை நான் படிக்க
பாதுகாத்து தந்தவன் நீ

பெற்றோர் இல்லா வேளைகளில்
என்னை பார்த்துக்கொண்டவன் நீ

நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி
என பல விளையாட்டுகள் சொல்லி தந்தவன் நீ

மண் குழப்பி வீடு கட்டி விளையாடி
அதில் நாம் நம் உறவினர்களுடன் வசிக்க
சொல்லித்தந்தவன் நீ

சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல்
ஓட்ட கற்றுத்தந்தவன் நீ

ஒவ்வொரு தோல்வியையும் எனக்கு
பாடமாக கற்பித்தவன் நீ

புது கைபேசி வந்தததும் அதை எனக்கு
தந்து அழகு பார்த்தவன் நீ

வீட்டினில் நான் செய்த குறும்பினால்
பெற்றோரிடம் அதிகம் திட்டு வாங்கியவன் நீ

எனக்கு எல்லாமாகவும் இருப்பவன் நீ
அடுத்த பிறவியிலும் வேண்டும்
எனக்கு அண்ணனாக நீ !!

Saturday, June 10, 2017

தாய்மை

உன்னை போல் பட்டாம்பூச்சியாய்
பறந்தவள் தான் நானும்

கல்லூரி முடிந்ததும் கல்யாணம்,
பறந்தவள்  சிறை பிடிக்க பட்டேன்

கல்யாணம் முடிந்து ஓரிரு ஆண்டுகள்
கடந்தும் வயிற்றில் நீ வராததால்

வந்தவர்கள் வாயில் நான் அவல்
ஆனேன் ...

எத்தனை பேச்சுகள் அவதூறுகள்
நான் அறியா வார்த்தைகள்
அறிந்து கொண்டேன் அருவருப்பு கொண்டேன்

யார் குற்றம் ? அறியவில்லை எனில்
அது பெண் குற்றம் என கொள்ளும் இச்சமூகம்

மருத்துவ வளரச்சியில் என்
வயிற்றில் நீ வளர்ந்தாய்

கடவுள் வரமென ஊர் சொல்லியது
கடவுளே வரமாக வந்ததாக நான் எண்ணினேன்

நீ பிறக்கும் முன் கருவில் நீ இருக்க
உறக்கம் தொலைத்தேன்

பெண்ணாக நீ பிறந்ததால் உறவை
தொலைத்தேன்

கள்ளிபாலா இல்லை தாய்பாலா என
உறவு கேட்டது ..

கடவுளை இழக்க மனமில்லை
உறவை இழக்க துணிந்தேன்

உன்னை வளர்த்த இந்த இருபது
வருடம் தூக்கம் பல தொலைத்தேன்
ஆனாலும் அவையாவும் ரசித்தேன்
சகித்தேன்

இன்று இருபது நொடியில் பூத்த
காதலுக்காக  என்னை மறக்க
நீ துணிந்தாய்

யார் குற்றம் இது ? இன்றும் தெரியவில்லை
உன்னை எதிர்க்க திராணியில்லை
கள்ளிப்பால் குடிக்க துணிந்தேன்

இன்றும்
கடவுளை இழக்க மனமில்லை
உயிரை  இழக்க துணிந்தேன்


அடுத்த பிறவியிலும் பெண்ணாகவே
பிறப்பேன் உன்னை சுமந்த சுகம்
மீண்டும் பெற ...

Tuesday, June 6, 2017

ரகசியம்

எல்லாரும் காக்கிறோம் ரகசியம்

வெளிப்படுவது ரகசியத்தை பொறுத்தது

பெண் தன் முதல் காதலை தன் கணவனிடம்
சொல்வதில்லை

பெண் தன் பசியை சொல்வதில்லை
தனக்கான உணவை தன் பிள்ளை
உண்கையில்

அவள் வீட்டு சமையல் அறை
பாத்திரம் சொல்லும்
ரகசியமாய் சேர்த்து வைத்த
பணத்தின் அருமையை

365 நாளும் உனக்காய் ஓய்வின்றி
உழைப்பாள் உன்னிடம் தன் வலியை
உன்னிடமிருந்து மறைப்பாள்

உண்மையை மறைப்பதும் ரகசியமே

இவை உனக்கு புரியும் போது
அவள் உன்னுடன் இருப்பதில்லை


யார் இவள்

யார் இவள்
வானத்து தேவதையோ
வானவில்லின் பொன்மகளோ

மயிலிறகின் ஸ்பரிசம்தனை
மறக்காமல் தந்திடுபவளோ

முன்காலை சூரியனின் பினாமியோ
சாயங்கால சூரியனின் சகோதரியோ

நிலவின் ஒளி தந்த நீ அவள் தோழியோ
இல்லை
அந்த நிலவே நீ தானோ ?

அழகின் அட்சயபாத்திரமோ ?
அவள் மேல் கொண்ட மோகத்தை கரைக்கும்
இவள் ஆகாய தாமரை யோ ?

காலையில் கண்விழித்து பார்க்கும்
உள்ளங்கை குறுந்செய்தியோ ?
கவிகள் வார்த்தை தேடி திண்டாடும்
அழகின் பிரபஞ்சமோ ?

அழகான ஓவியமோ இல்லை
எதிலும் எழுதாத காவியமோ ?

ஆர்ப்பரிக்கும் கடல் அலையோ
இல்லை அமைதியின் இமயமோ ?

முட்கள் கொண்ட மலரோ
இல்லை
முத்தத்தின் கொள்முதல் நிலையமோ ?

யார் இவள் விடை தெரிய காத்திருக்கிறேன் ..


Sunday, June 4, 2017

காதலை

காதல் விளையாட்டாய் தான்
தொடங்கியது எனக்கு

உன்னுடன் பேச முடியுமோ என

என் நண்பன் கட்டிய பந்தயம் தான்
உன்னுடன் நான் பேச காரணம்

காரணமின்றி பேசினேன் உன்னுடன்

ஆனால்
உன் கண்கள் சொல்லியது
ஆயிரம் காரணங்கள் நான் தினமும்
உன்னுடன் பேச ...

என் மௌனம் களைத்தேன் உன் ஓர விழி பார்வை என்னை தாக்கியபோது


காதல் எனும் போட்டியில் கலந்துகொண்டேன் உன் அழகிய நெற்றியில் என் கைகளால் வண்ணக்கோலமிட


எனக்கு உன்னுடன் அப்படி வாழனும் இப்படி வாழனும்னு ஆசை இல்லை,

அன்பே உன்கூட வாழனும் உனக்காக வாழனும் அவ்வளவே !

அழகை பார்த்தே முதலில் காதல் வந்தது அழகிடம் தோற்றுப்போயே நம் காதல் நிலைத்தது



தடைகள் எது வந்தாலும் தகர்ப்போம்

சுகமாக சுமப்போம் நம் காதலை
வாழும் காலம் முழுவதும்


Saturday, June 3, 2017

யார் இவள் - 8

உணவகம் நோக்கி நடந்தோம்
அமர்ந்தோம் உண்டோம்

எல்லா உணவிலும் சிறிது இனிப்பு
கர்நாடகாவின் சுவையோ?
இல்லை
என் மனதின் நிறைவோ ?

உண்டதற்கான ரசிது தரப்பட்டது
நிலவை அழைத்து வந்ததற்கு
எனக்கு தானே அவர்கள் தர வேண்டும்
கட்டணம் !?

பணம் கொடுத்து வெளியில் வந்து
அறை நோக்கி நடக்கையில்
குளிர்காற்று வீச உடல் மெல்ல நடுங்கியது
இருவருக்கும்

வானில் உள்ள நிலவு  பூமியில்
வந்ததென காண வந்ததோ
மழைதுளிகள் ?

துள்ளிக்குதித்தது மனம் இருந்தும்
இருந்தும் வெளிக்காட்டாமல் நடந்தேன்

மழையில் நனைய அவளுக்கும் பிடிக்கும் போலும்
நடந்தவள் என்னை பார்த்து கேட்டாள்
நாம பனிக்குழை சாப்பிடலாமா என்று 

அருகில் நிலா உடன் மழைத்துளி 

கையில் பனிக்குழை சாப்பிட்டுக்கொண்டே 
நடந்தோம் 


அவள் அறை  வரும் வந்தது 

அறையில் அவள் தோழிகளும் இருந்தனர் 
எங்கு சென்றீர்கள் என்றேன் 

ஊரை சுற்றி பார்க்க சென்றோம் 

துணிமணிகள் வாங்கினோம் என்றார்கள் 
இவள் வந்ததும் சென்றிருக்கலாமே
என்றேன்
காதில் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை

இவளிடம் காலையில் அலுவலகத்தில்
பாப்போம் என சொல்லி நடந்தேன்
என்  அறை நோக்கி ...


யாரும் இல்லா என் அறை
நினைவுகளில் அவள் மட்டும் என்னுடன்

இதுவரை கண்டது கனவா ? இல்லை
இனி காண போவது கனவா ?
படுக்கையில் படுத்து யோசிக்கையில்
கண் மூடினேன் !