Saturday, June 3, 2017

யார் இவள் - 8

உணவகம் நோக்கி நடந்தோம்
அமர்ந்தோம் உண்டோம்

எல்லா உணவிலும் சிறிது இனிப்பு
கர்நாடகாவின் சுவையோ?
இல்லை
என் மனதின் நிறைவோ ?

உண்டதற்கான ரசிது தரப்பட்டது
நிலவை அழைத்து வந்ததற்கு
எனக்கு தானே அவர்கள் தர வேண்டும்
கட்டணம் !?

பணம் கொடுத்து வெளியில் வந்து
அறை நோக்கி நடக்கையில்
குளிர்காற்று வீச உடல் மெல்ல நடுங்கியது
இருவருக்கும்

வானில் உள்ள நிலவு  பூமியில்
வந்ததென காண வந்ததோ
மழைதுளிகள் ?

துள்ளிக்குதித்தது மனம் இருந்தும்
இருந்தும் வெளிக்காட்டாமல் நடந்தேன்

மழையில் நனைய அவளுக்கும் பிடிக்கும் போலும்
நடந்தவள் என்னை பார்த்து கேட்டாள்
நாம பனிக்குழை சாப்பிடலாமா என்று 

அருகில் நிலா உடன் மழைத்துளி 

கையில் பனிக்குழை சாப்பிட்டுக்கொண்டே 
நடந்தோம் 


அவள் அறை  வரும் வந்தது 

அறையில் அவள் தோழிகளும் இருந்தனர் 
எங்கு சென்றீர்கள் என்றேன் 

ஊரை சுற்றி பார்க்க சென்றோம் 

துணிமணிகள் வாங்கினோம் என்றார்கள் 
இவள் வந்ததும் சென்றிருக்கலாமே
என்றேன்
காதில் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை

இவளிடம் காலையில் அலுவலகத்தில்
பாப்போம் என சொல்லி நடந்தேன்
என்  அறை நோக்கி ...


யாரும் இல்லா என் அறை
நினைவுகளில் அவள் மட்டும் என்னுடன்

இதுவரை கண்டது கனவா ? இல்லை
இனி காண போவது கனவா ?
படுக்கையில் படுத்து யோசிக்கையில்
கண் மூடினேன் !

No comments: