உன்னை தேடியே இங்கு பலரின் பயணம்
நீ மட்டும் இல்லை என்றால் பலருக்கு
போராடும் குணம் கூட இல்லாமல் போயிருப்பான்
உனக்கு எல்லாரையும் பிடிக்கும் தான்
ஆனால் உன்னை மட்டும் பிடித்தவருக்கு தான்
யாரையும் பிடிக்காமல் போகிறது
குற்றம் செய்தவன் நீ என்று ஊர் பழி சொல்லும் உன்மேல்
குற்றமற்றவனாய் நடப்பான் மனிதன் பழி உன் மேல் போட்டு
உனக்கு நண்பன் யார் தெரியாது உனக்கு உறவு யார் தெரியாது
ஆனால் நீ உடன் இருந்தால் தான் இவை இருப்பது அவனுக்கு
தெரிகிறது
இவ்வுலகில்
உன்னால் வாழ்ந்தவர் கதை சொல்லும் கதைகள் ஏராளம்
உன்னால் வீழ்ந்தவர் கதை சொல்லும் கதைகள் தாராளம்
உறவுகள் தொலைத்து நண்பர்கள் தொலைத்து
உணவை தொலைத்து வாழ்வை தொலைத்து
உன்னை தேடி ஒடி சேர்த்தேன் உனை என்னிடம் ...
உடன் வந்தது அழையா விருந்தாளியாய் நீரிழிவு ,
ரத்த அழுத்தம் , நிம்மதியின்மை , தூக்கம் இல்லா இரவுகள்
இருந்தும்
கடைசியில் மரணம் அழைக்கையில் புதைக்கவோ
எரிக்கவோ நீ அருகில் இல்லையெனில்
அநாதை பிணமாய் சைவ அறையில் மூலையில்
ஈக்கள் மொய்க்க படுத்திருப்பேன் ...
அளவோடு இல்லையெனில் அமிர்தமும் நஞ்சு தான்
அளவோடு உன்னை அணைக்க ஓடுகிறேன்
வா பணமே !!

No comments:
Post a Comment