Wednesday, February 28, 2018

மனிதா

மனிதா
உன் அரக்க குணத்திற்கு
இனம் காரணமில்லை
தமிழனை கொன்றாய்
இலங்கையில்

மனிதா
உன் அரக்க குணத்திற்கு
மதம் காரணமில்லை
எல்லா மதத்தவனையும்
கொல்கிறாய்
உலகெமெங்கும்

மனிதா
உன் கொடூர
குணத்திற்கு
குழந்தையும்
தப்பவில்லையோ

தாய்ப்பால் குடிக்க வேண்டிய
குழந்தைகள்
ரத்தக்களத்தில்,
புகைப்படம் ஆயினும்
என் கண்களீல் ரத்தம்
பீறிட்டு வருகிறது

உணவு பொட்டலம் போல்
குண்டை வீசுகிறாய்

கடவுள் உண்டென்று
நினைத்திருந்தேன்
மனிதா ,
இதை காணும் போது
அவனையும்
நீ கொண்டிருக்க கூடும்
என எண்ணுகிறேன்

இலங்கை என்றாலும்
சிரியா என்றாலும்
வாழும் மனிதன்
உடலில் ஓடுவது
சிவப்பு குருதிதான்
என நீ அறியாத வரை

பிணம் தின்னும்
கழுகு கூட்டமாய்
மனிதன்
மாறிக்கொண்டுதானிருப்பான்

புதியதொரு உலகம் பிறக்கும் வரை

Monday, February 26, 2018

வாடா என் காதல்

ஈர்ப்பு 
என்று காதலானது 
அறியவில்லை 

உன் விழிகளால்
எனை ஈர்த்து
வீழ்த்திவிட்டாய்

பௌர்ணமி முழு நிலவு போல்
உன் முகம் அதில்
ஜொலிக்கும் நட்சத்திரம் போல்
உன் மூக்குத்தி

கவிதைகள்  பல இருந்தும்
உன் உதடுகள் உதிர்த்த
வார்த்தைகள் தான்
நான் கேட்ட மிக சிறந்த கவிதை

கர்ஜிக்கும் சிங்கத்தையும் 
முயல்குட்டியாய் 
மடியில் கிடத்தி 
தலை கோத உன்னால் தான் 
முடியும் 

உன் கூந்தல் உதிர்த்த 
மலர்கள் எல்லாம் 
எடுத்து சேமித்து வைத்தேன் 
  நானும் ஒரு நாள் 
உன் மனதில் இருந்து 
உதிர்ந்து விழுவேன் 
என அறியாமல் 

உன் சுவாசம் அடைத்த 

பலூனையும் 
எடுத்து வைத்தேன் 
என் சுவாசமே நீ இன்றி 
ஒருநாள் 
தவிப்பேன் என அறியாமல் 

உன் குரல் உள்ள 

ஒலிநாடாவும் 
அடுக்கி வைத்தேன் 
அதில் தான் இனி உன் குரல்
கேட்பேன் என அறியாமல்

உன் புகைப்படம்
அனைத்தும்
அலங்கரித்து வைத்தேன்

உன்னை மிகவும் நேசித்தேன்
மணப்பெண் கோலத்தில்
உன் அருகில் நான் என
என் கனவுகளில் லயித்தேன்

பொய் உவமை  சேர்த்து எழுதிய 
என் கவிதைகள் போல் 
என் காதலும் இருக்கும் 
என நினைத்தாயோ ?

என் தனிமையையும் 
களவாடி 
நினைவுகளாய் 
என்னை 
காதலிக்கிறாய் 

என்னை காண நீ மறந்தாலும்

இல்லை மறுத்தாலும்
இந்த ஒற்றை ரோஜா வாடினாலும்
என்றும் வாடா என் காதல்
உனக்காய் காத்திருக்கும்
காலமெல்லாம்
உன் வரவை எண்ணி


Tuesday, February 20, 2018

(பூஜா )

இணையத்தின்
அரட்டை அரங்கத்தில்
கிடைத்த உறவு

அவளை பற்றி எனக்கு எதுவும்
தெரியாது
என்னை பற்றியும் அவளுக்கும்
தெரிந்திருக்க நியாயமில்லை
அரட்டைக்கு எதுவும்
தேவையுமில்லை

எழுதிய கவிதையெல்லாம்
நான் எழுதியது என்றால்
மறுப்பாள்
அவ்வளவு நம்பிக்கை
என் எழுத்தின் மேல்
அவளுக்கு

எழுதிய கவிதை எல்லாம்
அவளை படிக்க சொல்வேன்
சகிக்கவில்லை என்பாள்
ரசித்துக்கொண்டே

பூக்கும் பூவெல்லாம்
பூஜைக்கு போக முடியாது
ஆனால்
இந்த ftc தோட்டத்தில்
பூத்த நட்பு (பூ)  ஒன்று
என்றும் என் தோழியாய்
பூஜிக்க (பூஜா )
கிடைத்ததெனக்கு

Monday, February 19, 2018

இணைய நட்பு

இணையத்தில் பிறந்து
என் இதயத்தில் நுழைந்த
உறவே

எனக்கு பிடித்ததெல்லாம்
உனக்கும் பிடிக்கும் என்கிறாய்

உன் எண்ணங்களின் பிரதிபலிப்பில்
நான் என்னை பார்க்கிறேன்
என் உறவே

உன் ஆங்கில புலமையும்
புத்தி கூர்மையும் கண்டு வியக்கிறேன்

எனக்கு செல்ல சண்டையிட ஓர் உறவு
கிடைத்ததென மகிழ்கிறேன்

இணைய உறவெல்லாம் சிறிது காலத்தில்
பிரிந்திடும் என்று  சொன்னதால்
சற்று தள்ளி நின்று பயக்கிறேன்

இணையத்தில் கிடைப்பதெல்லாம்
காதல் பூ அல்ல அதைவிட உயர்ந்தது
எனக்கு கிடைத்த இந்த
நட்பு (பூ)

Sunday, February 18, 2018

அப்பா !!!

அப்பா
கண்ணீர் விட்டு கண்டதில்லை
அவரை
நினைத்தால் என் விழியோரத்தில்
கண்ணீர் எட்டி பார்க்க தவறுவதில்லை

பிரசவத்தில் தாய்க்கு வலி
உடலாலும் மனதாலும்
உணர்ந்தவர் பலர்
ஆனால்
தந்தையின் வலி அவர்
சொல்வதில்லை யாரிடமும்

தனக்கு கிட்டாத உலகத்தை
தன் குழந்தைக்கு கிடைக்க
நினைப்பவர் தந்தை

கைக்குழந்தை எனினும்
தோளில் வைத்து உலகத்தை
ரசிக்கவைப்பவர் அவர்

இதுவரை என்னை அடித்ததில்லை
அவர் என்னை அதிகம் கொஞ்சியதாகவும்
நினைவுமில்லை

என் சிக்கல்களை பகிர்ந்துகொள்ள
தாய் உண்டு எனினும்
பக்கபலமாக தந்தை உண்டு என்பதே
அதை எதிர்கொள்ள மனவலிமை
தருகிறது

சைக்கிளில் நீ சென்றாலும்
நான் மோட்டார் வண்டியில்
செல்ல என்னை விட அதிகம்
ஆசைபட்டது நீயல்லவா

புதுதுணி உனக்கு எடுத்தாலும்
அதை என் அலமாரியில் வைக்க
நீ தவறுவதில்லை

பிள்ளைக்கு வேண்டுமென நீ சேர்த்தாய்
பொருளெல்லாம்,
என்றுதான் நினைப்பாயோ
உனக்கென்ன வேணுமென ?!

பிள்ளையின் வெற்றிகளை
மற்றவர்களிடம்
நீயும் பகிர்ந்துகொள்வாய்
என நானறிவேன்

அப்பா, உன் அன்பு அதை என்றும்
வார்த்தையால் நீ சொல்லியதில்லை
அதை வார்த்தையால் விவரிக்க
இந்த கவிதையால் முடியுமோ ?

அடுத்த பிறவியிலும் வேண்டும்
எனக்கு நீ அப்பா !!!


Tuesday, February 13, 2018

வேண்டும்

எனக்கு மட்டும்
அழகாய் தெரியும்
காதலி
வேண்டும்

அவளிடிமிருந்து
அடங்காத காதல்
வேண்டும்

அன்புக்கு அவள் இலக்கணமாக
வேண்டும்

அறிவுக்கு அவள் மகுடம் சூட்ட
வேண்டும்

எங்கள் இரு பிள்ளைக்கு
அவள் பெயர் சூட்டிட
வேண்டும்

முள் சக்கரமாய் பயணிக்கும்
என் வாழ்வில்
பூக்களாய் அவள்
வேண்டும்

என்னை பிரியாத வரம்
வேண்டும்
பிரிந்தால் என் உயிர்
பிரியும் வரமாய் அவள்
வேண்டும்

அவளுடன் வாழும் தினம்
எல்லாம் காதலர் தினமாக
வேண்டும்


Monday, February 12, 2018

வரமா இல்லை சாபமா ?

தினமும்
உன்னை தொட்டு பார்த்துதான்
நான் கண் விழிக்கிறேன்

கண்விழிக்கையில்
 நீ அகப்படவிலையெனில்
ஏனோ இதயம் படபடக்கிறது

நீ வந்தபின்தான் நான்
கைக்கடிகாரம் பார்ப்பதில்லை

நீ வந்தபின் எனக்கு
நிறைய புது உறவுகள்
கிடைத்தது

தூரத்து உறவுகளும்
அருகே வந்தது

ஏனோ அருகில் இருந்த
உறவுகள் தூரமாயின

ஒரு பத்து தொலைபேசி எண்ணாவது
என் சிறு நினைவில் சேமித்திருந்தேன்
நீ வந்த பின் என் எண்ணே எனக்கு
மறந்துவிட்டது

உன்னை விட்டு பிரியா வரம் தான்
கேட்கிறேன்

வேறொருவர் உன்னை தொடா வண்ணம்
உன்னை பொத்திப்பொத்தி காக்கிறேன்

விடை தெரியா என் கேள்விக்கெல்லாம்
விடையை உன்னிடம் தான் கேட்கிறேன்

இதற்கும் பதில் சொல்
தூக்கம் தொலைத்து
அருகில் இருந்த
என் உறவுகளை தொலைத்து
கைபேசியே
உன்னை சுமப்பது
வரமா இல்லை சாபமா ?

Friday, February 9, 2018

யாரிவாரோ !?

இதுவரை
உன்னை ஆயிரம் முறை
பார்த்திருப்பேன்
ஆனால்
இன்னும் நான் உன்னை
முதன் முதல் பார்த்த
நொடி என் நெஞ்சை விட்டு
நீங்கவில்லை

அதற்குள்
நமக்குள் பிரிவு
மூச்சடைக்கிறது

எத்தனை இரவுகள்
இன்னும் நீளாதோ என
ஏங்கியிருப்பேன்
இன்று
தூக்கமில்லா
இரவு கடக்கையில்
கண்ணும் தூங்கவில்லை
காரணமும் தெரியவில்லை
தேய்பிறையில்
என் நினைவுகளின்
பிம்பம் மட்டும் மிச்சம்

விட்டுக்கொடுத்தேன்
உனக்காய் எல்லாவற்றையும்
இன்று
உன்னையே
விட்டு விட  சொல்கிறாய்
என்னால் முடியவில்லை

என்மேல்விழுகின்ற
மழை நீரில்
என் கண்ணீரை
யாரிவாரோ !?

Wednesday, February 7, 2018

என்ன தவம் செய்தேனோ


 பெயர்தான் கவிதை என்றால்
எனக்கு பிடித்த சிறு கவிதை இவள்

இசை தான் மொழி  என்றால்
எனக்கு பிடித்த மெல்லிசை இவள்

இனிப்பு தான் உணவென்றால்
எனக்கு பிடித்த இனிப்பு பலகாரம் இவள்

தமிழ்தான் இவள் மொழி என்றாலும்
தலைக்கனம் இல்லாதவள்

கதவின் பின்னால் ஒளிந்திருந்து
எட்டி பார்க்கும்  இவள் பார்வை தான்
என் மனதில் பதிந்த ஓவியம்

இவளை உவமை சொல்லி
ஒப்பிட்டால் உவமைக்கு
பெருமையா  இல்லை
இவளுக்கு பெருமையா ?
நானறியேன்

இறைவன் படைத்த
படைப்பில் உன்னதம்
இவள்

வீடு செல்லும் போதெல்லாம்
ஓடி வந்து முத்தமிடும்
இவள்
என் மகளாய் பெற
என்ன தவம் செய்தேனோ



Monday, February 5, 2018

என் காதலி

பார்க்க அழகான பெண்ணை
நான் தேடவில்லை

பாசம் வைத்து நான் பார்க்க
ஒரு பெண்ணை
 தேடுகிறேன்

சுவாசிக்க நான் விரும்பவில்லை
அவளின் சுவாசமாய் மாற
விரும்புகிறேன்

கவிதை எதுவும் எழுத
தெரியாது எனக்கு
அவள் பெயர் தெரிந்தால்
அதை தினமும் உச்சரித்து
கற்றுகொள்ள ஆவல் கொண்டுள்ளேன்

இளவரசி நீ, என் வீட்டு
இல்லத்தரசியாக
மாற காத்திருக்கிறேன்

பூவின் மொட்டுபோல்
மௌனமாய் இருக்காமல்
மலர்ந்த மலர் போல்
சிரிக்கும் அவளை
காண காத்திருக்கிறேன்

கானல் நீர் போல்
காண்பதெல்லாம் நீயோ
என துடிக்கிறது
என் மனம்

என் வாழ்க்கை பாதையில்
முடிவிலா பயணம் நீ

சுகமும் துக்கமும்
மேகம் போல்
நம் வாழ்வில்
கலந்து இருப்பினும்
நட்சித்திரமாய்
உன்னை ஜொலிக்க வைப்பேனே

ஓர் அந்தி மாலையில்
நம் வீட்டு மொட்டை மாடியில்
இளங்காற்று நம்மை அணைக்க
என் தோளில் நீ சாய்ந்து
வானத்து மதியை
நாம் ரசிக்க வேண்டுமடி

கண்கள் திறக்கும் வரை
நீடிக்கும் கனவு போல்
என் வாழ்க்கை நீடிக்கும்
நொடி வரை வேண்டுமடி
நீ எனக்கு