Sunday, February 18, 2018

அப்பா !!!

அப்பா
கண்ணீர் விட்டு கண்டதில்லை
அவரை
நினைத்தால் என் விழியோரத்தில்
கண்ணீர் எட்டி பார்க்க தவறுவதில்லை

பிரசவத்தில் தாய்க்கு வலி
உடலாலும் மனதாலும்
உணர்ந்தவர் பலர்
ஆனால்
தந்தையின் வலி அவர்
சொல்வதில்லை யாரிடமும்

தனக்கு கிட்டாத உலகத்தை
தன் குழந்தைக்கு கிடைக்க
நினைப்பவர் தந்தை

கைக்குழந்தை எனினும்
தோளில் வைத்து உலகத்தை
ரசிக்கவைப்பவர் அவர்

இதுவரை என்னை அடித்ததில்லை
அவர் என்னை அதிகம் கொஞ்சியதாகவும்
நினைவுமில்லை

என் சிக்கல்களை பகிர்ந்துகொள்ள
தாய் உண்டு எனினும்
பக்கபலமாக தந்தை உண்டு என்பதே
அதை எதிர்கொள்ள மனவலிமை
தருகிறது

சைக்கிளில் நீ சென்றாலும்
நான் மோட்டார் வண்டியில்
செல்ல என்னை விட அதிகம்
ஆசைபட்டது நீயல்லவா

புதுதுணி உனக்கு எடுத்தாலும்
அதை என் அலமாரியில் வைக்க
நீ தவறுவதில்லை

பிள்ளைக்கு வேண்டுமென நீ சேர்த்தாய்
பொருளெல்லாம்,
என்றுதான் நினைப்பாயோ
உனக்கென்ன வேணுமென ?!

பிள்ளையின் வெற்றிகளை
மற்றவர்களிடம்
நீயும் பகிர்ந்துகொள்வாய்
என நானறிவேன்

அப்பா, உன் அன்பு அதை என்றும்
வார்த்தையால் நீ சொல்லியதில்லை
அதை வார்த்தையால் விவரிக்க
இந்த கவிதையால் முடியுமோ ?

அடுத்த பிறவியிலும் வேண்டும்
எனக்கு நீ அப்பா !!!


No comments: