Monday, August 10, 2020

கண்ணாடி தோழன் 


 சின்னஞ்சிறு வயதில் 

முதன் முதலில் 

உன்னை பார்த்ததும் 

ஆச்சர்யம் ஆட்கொண்டது 


விளையாட்டு 

தோழனாய்  நீ 

கையால் தொட எத்தனித்தேன் 

முடியவில்லை 


நான் சிரித்தால் 

நீயும் சிரித்தாய் 

நான் அழுதால் 

நீயும் அழுதாய் 


உணர்வுகளின் 

பிரதிபலிப்பாய் 

நீ இருப்பதாய் 

காலம் எனக்கு 

உணர்த்தியது 


உன்னை காண்கையில் 

அழகாய் தெரிந்தால் 

என்னவளுக்கும் 

அழகாய் தெரிவதாய் 

உணர்ந்தேன் 


ஏமாற்றம் 

எனை  ஆட்கொள்கையில் 

உன்னிடம் தான் வந்து 

அழுவேன், 

என்னை பிரதிபலிக்கும் 

உன்னைக்காண்கையில் 

கோவம் கொப்பளிக்கும் 


எதிரில் இருக்கும் 

உன்னை அடிப்பேன் 

காயங்களும் வலிகளும் 

எனக்கு 

நிமிர்ந்து பார்க்கையில் 

என் மனதை 

போல் 

துக்கு துகளாய் 

சிதறியிருப்பாய் 


சிதறிய துகள்கள் 

ஒவ்வொன்றும் 

என்னை பிரதிபலிக்கும் 




No comments: