Tuesday, October 20, 2020

 காலையில் கண்விழிக்கும் நேரம் 

கண் தேடுகிறது 

அருகில் உன்னை 

காண 


நடக்கையிலும் 

உன்னை பார்த்தபடி 

நடக்கவே மனம் 

விரும்புகிறது 


எங்கு பயணிக்கையிலும் 

உன்னுடன் பயணிக்கவே 

விரும்புகிறது 

மனம் 


விடை தெரியா 

கேள்விக்கெல்லாம் 

விடையாய் என்முன் 

நீயே 


நீ அருகில் இல்லா 

நாட்கள் 

நிலா இல்லா வானம் போல 

இருண்டு விடுவதாய் 

உணர்கிறேன் 


நீ என்ன என் காதலியா 

இல்லை 

நீ அதற்கும் மேல் 

என் செல்ல 

தொலைபேசியே 


விசித்திரம் நிறைந்த 
இவ்வுலகத்தில் 
விசித்திரமான
மக்கள் சிலர் 

வறுமை கோட்டுக்கு 
கீழ் உள்ள மக்கள் என்று 
சொல்லி கோடு கிழித்து 
கோடு தாண்டாமல் 
பார்த்து கொள்கிறார்கள் 
சிலர் 

பணம்,ஜாதி , இனம் 
என மனிதனை பிரித்து 
ஒதுக்கி  விடுகிறார்கள் 
சிலர் 

ஆள் பலம் , பண பலம் 
என்று அதிகாரத்தை 
கையில் எடுத்துக்கொள்கிறார்கள் 
சிலர் 

அதிகாரம் எப்படி 
செயல்பட வேண்டும் என 
தேர்தல் நெருங்கும் நேரம் மட்டும் 
மக்களுக்கு உணர்த்தும் 
சிலர் 

அறிவிக்க படும்
நலத்திட்டங்களெல்லாம் 
ஊடகத்தில் மட்டும் பரவுவதை 
கொண்டாடும் 
சிலர் 

5 நொடிகள் 
உங்கள் கால்களில் விழுந்தும் 
கைகூப்பயும் ஒட்டு கேட்டு 
5 வருடங்கள் 
உங்களை ஊனத்தோடு 
உலவ விடும் அரசியல்வாதிகள் என்று 
சிலர் 

ஈன செயலுடன் 
தவறு செய்பவன் 
எந்த நடிகனின் ரசிகன் என்றும் 
எந்த கட்சியின் தொண்டன் என்றும் 
ஊடகத்தில் விவாதமாக்கி 
அவன் மனிதனல்ல 
என்ற ஒன்றை மறந்து,மறைத்து 
அடுத்த பிரச்சனைக்கு தாவும் 
நடுநிலையை நிலை நாட்ட
போராடும் ஊடக துரோகிகள் 
சிலர் 

இது ஏதும் அறியாமல் 
ராமன் ஆண்டாளும்
இராவணன் ஆண்டாளும் 
எனக்கு கவலையில்லை 
என் கவலையே எனக்கு போதும் 
என முக்காடு இட்டுக்கொள்ளும் 
சிலர் 

அடக்குமுறை கண்டு 
காந்தியும், காமராசரும், பெரியாரும் 
அவ்வப்போது உருவாகிறார்கள் 
நம்மிலிருந்து 
சிலர் 

நாடு முன்னேற 
நமக்கு இன்னும் 
வேண்டும் இவர்களை போல 
சிலர் 

Wednesday, October 14, 2020




 சுறுசுறுப்பாய்

லட்சியம் நோக்கி
பயணிக்கையில்
உச்சம் தொடலாம்
என உணர்த்தும்
"எறும்பு"

 


தண்ணீர் ஊற்றி
குளிப்பாட்டுக்கையில்
குளிர்ந்திடும்
குழந்தை

குழந்தையின்
ஒற்றை
முத்தத்தில்
குளிர்ந்திடும்
தாய் 


Tuesday, October 13, 2020

தாய்

தாய் 

கண்கொண்டு 
பார்க்கவில்லை 
நேசித்தாள் 

கவலையின்றி 
வாழ 
சுவாசித்தாள் 

வார்த்தைகள் 
ஏதுமில்லாமல் 
அன்பை கடத்தினாள் 

விறல் பிடித்து 
நடக்காமல் 
பாதை காட்டினாள் 

கருவாக உருவான -என் 
உருவத்தை காண 
விஞ்ஞான துணையின்றி 
வலியினூடே 
என்னை பிரசவித்தாள் 

Monday, October 12, 2020

ஒரு விதி செய்வோம்

 போர்க்களத்திலே

எதிரிகள் சூழ்ந்திருக்க 

நெஞ்சிலே வீரம் கொண்டு 

கையில் வாளும், வில்லும் அம்பும் ,

ஈட்டியும் ஏந்தி 

பகைவர்களின் தலைகளை 

பகடைகளாய் வீழ்த்தி 

நிமிர்ந்து நின்ற 

என் குல பெண்கள்


சினமுற்றாள்  

விரட்டினாள் 

புலியை கூட

முறத்தால் 

என் வீர தமிழ்பெண் 

அன்று 

 

இன்று 

கையில் வாளும் இல்லை 

ஈட்டியும் இல்லை 

எதிரிகள் மட்டும் 

கண்முன்னே

பற்பல 

முகங்களில் 

உன்னை சூழ்ந்து 

நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் 


கள்ளிப்பால் முதல் 

கணினி வரை 

உன்னை வீழ்த்த 

திட்டங்கள் தான் 

எத்தனை எத்தனை ..


சிலருக்கு 

வாழ்க்கையில் 

போராட்டம் 

உனக்கோ 

வாழ்க்கையே 

போராட்டமாய்


பாரத மாதா 

பூமி தாய் 

தமிழ் தாய் 

காவேரி,கங்கை என 

பெண்ணை போற்றி வணங்கி 

புத்தகத்தில் புதைத்துவிட்டோம்  


நீதி தேவதையின் 

கண்ணை கட்டிவிட்டோம் 

கயவர்கள் தப்பித்து 

எழுத கூட கூசும் 

ஈன செயலை செய்தவனுக்கு 

தையல் இயந்திரம் வாங்கவா?


பெண்ணே 

நிமிர்ந்து நின்று 

எதிரிகளை வீழ்த்த 

சினம் கொண்டு 

எழுந்து வா 


பெண்ணே 

உனக்காய் 

ஒரு விதி செய்வோம்