Tuesday, October 20, 2020

விசித்திரம் நிறைந்த 
இவ்வுலகத்தில் 
விசித்திரமான
மக்கள் சிலர் 

வறுமை கோட்டுக்கு 
கீழ் உள்ள மக்கள் என்று 
சொல்லி கோடு கிழித்து 
கோடு தாண்டாமல் 
பார்த்து கொள்கிறார்கள் 
சிலர் 

பணம்,ஜாதி , இனம் 
என மனிதனை பிரித்து 
ஒதுக்கி  விடுகிறார்கள் 
சிலர் 

ஆள் பலம் , பண பலம் 
என்று அதிகாரத்தை 
கையில் எடுத்துக்கொள்கிறார்கள் 
சிலர் 

அதிகாரம் எப்படி 
செயல்பட வேண்டும் என 
தேர்தல் நெருங்கும் நேரம் மட்டும் 
மக்களுக்கு உணர்த்தும் 
சிலர் 

அறிவிக்க படும்
நலத்திட்டங்களெல்லாம் 
ஊடகத்தில் மட்டும் பரவுவதை 
கொண்டாடும் 
சிலர் 

5 நொடிகள் 
உங்கள் கால்களில் விழுந்தும் 
கைகூப்பயும் ஒட்டு கேட்டு 
5 வருடங்கள் 
உங்களை ஊனத்தோடு 
உலவ விடும் அரசியல்வாதிகள் என்று 
சிலர் 

ஈன செயலுடன் 
தவறு செய்பவன் 
எந்த நடிகனின் ரசிகன் என்றும் 
எந்த கட்சியின் தொண்டன் என்றும் 
ஊடகத்தில் விவாதமாக்கி 
அவன் மனிதனல்ல 
என்ற ஒன்றை மறந்து,மறைத்து 
அடுத்த பிரச்சனைக்கு தாவும் 
நடுநிலையை நிலை நாட்ட
போராடும் ஊடக துரோகிகள் 
சிலர் 

இது ஏதும் அறியாமல் 
ராமன் ஆண்டாளும்
இராவணன் ஆண்டாளும் 
எனக்கு கவலையில்லை 
என் கவலையே எனக்கு போதும் 
என முக்காடு இட்டுக்கொள்ளும் 
சிலர் 

அடக்குமுறை கண்டு 
காந்தியும், காமராசரும், பெரியாரும் 
அவ்வப்போது உருவாகிறார்கள் 
நம்மிலிருந்து 
சிலர் 

நாடு முன்னேற 
நமக்கு இன்னும் 
வேண்டும் இவர்களை போல 
சிலர் 

No comments: