Tuesday, January 31, 2017

காத்திருக்கிறேன்

என் இதயத்தில் ஓராயிரம் ஆசைகள்
ஓராயிரம் ஆசைகளும் ஒன்றாய்
உன்னை சுற்றியே இருந்தன...

உன்னை நான் பார்க்கும் போதெல்லாம்
என் மனம் கவிஞனாய் மாறும்

எழுத்தாணி பிடிக்கும்போது ஏனோ
ஊமையாகி போகும்

நான் உன் அருகில் வரும்போதெல்லாம் ஏனோ
நீ விலகி செல்கிறாய்

ஆனால் என் உள்ளத்தில் உன்
நினைவுகளோ நெருங்கி நிற்கிறது

என் கண் எட்டும்  தூரத்தில் நீயில்லை -இருந்தும்
என் கண்கள் உன்னை தேடுகிறது

பாவம் அதற்கு தெரியவில்லை  நீ இருப்பது
என் இதயத்திலென்று ..

உன்னிடம் பேசாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
வாழ்க்கை கழிகிறது மௌனமாய்

கொட்டி தீர்த்திருக்கிறேன் என் எண்ணத்தை
இதோ என் காதல் கடிதங்களாய்..

என் காதலை உன் நினைவுகளாக்க போகிறாயா ?
இல்லை
வாழ்க்கையாய் மாற்ற போகிறாயா ?

காத்திருக்கிறேன் பதிலுக்காக அன்பே ..
சொல்லிவிடு ...

No comments: