Tuesday, January 31, 2017

புரியாத புதிர் !

புரியாத புதிர் 

முதன் முதல் எனை பார்த்த போது
உன் உணர்ச்சியை நான் காணவில்லை

என்றும் எனை பற்றியே -உன்
சிந்தனை இருந்திருக்கக்கூடும்

எனக்காகவே நீ மறைத்திருப்பாய்
உன் துக்கங்களை என்னிடமிருந்து

நீ சோகமாய் இருந்தோ கண்ணீர்விட்டோ
நான் கண்டதில்லை...

நான் கேட்கும் எதையும் நீ
தர மறுத்ததில்லை இதுவரை....

என்னை பொறுத்தவரை -நீ
ஒரு புரியாத புதிர் தான்..

அந்த புதிருக்கான விடை காண
இதோ காத்திருக்கிறேன்

மருத்துவமனையின் முன்
அப்பா ஆகும் தருணத்திர்காக..

No comments: