Monday, March 26, 2018

உயர்ந்தவர்கள்

சிறுவயதில் என்னை
பள்ளியில் சேர்க்க
ரசீது இல்லாமல்
நன்கொடை என்ற பெயரில்
வாங்கின நிர்வாகம்
ஏனென்றேன்
பதில் வந்தது அது
உயர்ந்த பள்ளி என

அரசு அலுவலகத்தில்
அப்பாவுடன் சென்றேன்
நியாயமாய் செய்ய வேண்டிய
பணி  செய்ய பணம் கொடுத்தார்
ஏனென்றேன்
பதில் வந்தது அவர்
உயர்ந்த அதிகாரி என

தேர்தல் சமயம்
வீடுவீடாய்
ஓட்டுக்கு மனம் கொடுத்து
கொடுத்து கொண்டிருந்தார்
யாரென்றேன்
பதில் வந்தது அவர்
உயர்ந்த அரசியல்வாதி  என

கடவுளை தரிசிக்க சென்ற
நேரம் கூட்டம் அதிகம்
பலர் அதிக பணம் கொடுத்து
வேறு வழியில் தரிசித்து வந்தனர்
ஏனென்றேன்
பதில் வந்தது அவர்
 உயர்ந்த கடவுள்

எவ்வகையில் இவர்கள் உயர்ந்தவர்கள்
விடை தெரியா கேள்வியில் நான்

Tuesday, March 20, 2018

புரியாத புதிர் !

கடவுள் இல்லை!
கடவுள் இருக்கிறார்!
கடவுள் இருந்தால் அவர் யார் ? எங்கிருப்பார் ?

ஏன் என் துன்பங்களில்
அவர் வருவதில்லை

வருகிறார் பள்ளிக்கூடத்தில்
ஆசிரியர் எல்லாருக்கும்
ஒரே போல் தான் கற்பிக்கிறார்
பின் எப்படி ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மதிப்பெண்கள் ?

கடவுள் காற்றை போல்
எங்கும் வியாபித்திருக்கிறார்
தேவைப்படுபவன்
மின்விசிறி  வைத்து கொள்கிறான்

அதனால் எங்கும் வியாபித்திருக்கும்
காற்று இல்லாமல் போகுமோ?!
இல்லை என்றால் அது தர்மமாகுமோ ?

Saturday, March 17, 2018

அன்பு தோழி நியா !!!

நமக்கான உரையாடலில் 
முதலில் பேசியது 
நீயே !

நண்பனாய் எனை கண்டு 
மின்னஞ்சல் அனுப்பி
என்னை மகிழ்ச்சியில் 
ஆழ்த்தியது 
நீயே !

நிதர்சனம் உன் கவிதை 
வரிகளாக்கி  எழுதுபவள் 
நீயே !

குயில்களும் வெட்கம் 
கொள்ளும் குரலில் 
நிகழ்ச்சியை நடத்துபவள் 
நீயே !

பட்டிமன்றத்தில் 
உன் பேச்சால் 
எங்களை ஆச்சர்யப்படுத்துபவள் 
நீயே !

அன்பென்ற மாலையில் 
கோர்த்த முத்தொன்று 
உதிர்ந்ததெண்ணி 
கோர்த்துவைத்த மற்ற முத்துக்கள் 
சிதறுமோ என அஞ்சுபவள் 
நீயே !

பல திறமை உனக்குண்டு 
பல நட்புக்களும் இங்கு உனக்குண்டு

உன் நட்பெனும் மாலையில் 
உதிராத நட்பாய் என்றும் 
நானுண்டு என் 
அன்பு தோழி நியா !!!

Thursday, March 15, 2018

அலியா என்கிற மிஸ்டரி

அரட்டை அரங்கத்தில் 
அகர வரிசையில்         
இவள் பெயர்
முதலில் இருக்கும்

ftc மன்றத்தில்
உலகம் இவள் நுனியில்
இருக்கும்

என் கடன் பணி செய்து கிடப்பதே
என இவள்  மன்றத்தில்  பதிவிடும்
ஒவ்வொரு பதிவிற்கும்
எதையும் எவரிடமிருந்தும்
எதிர்பார்ப்பதில்லை

காணொளியாகட்டும்
குறிப்புகளாகட்டும்
தான் கண்டதை மன்றத்தில்
பதிவிடுவதாகட்டும்
இவளுக்கு நிகர் இவளே

"நீ என்பதே நான் தானடி "
இவள் பதிவிடும் கதை மட்டும்
அல்ல ftc மன்றம் என்பதே
நீதானடி

அரட்டை அரங்கத்தில்
இவள் ஏனோ மௌனமாய்
இருப்பாய்
அதனால் தானோ
மன்றத்தில் இவள் பெயர்
மர்மம் (மிஸ்டரி) என
வைத்தாலோ

எல்லாருக்கும் பிடித்த
ஒரு தோழி ftc யில்
உண்டெனில்
அது இவள் தான்

என்றும் நம் மனதில்
இருந்து அழியா
தோழி இவள் தான்
அலியா என்கிற மிஸ்டரி
(Alea (a) Mystery)

Monday, March 12, 2018

என் காதல் மறையாது

காற்றடைத்த பலூனை
திறந்து விட்டது போல்
என் மீதான உன் அன்பை
துறந்துவிட்டாய்  என்கிறாய்

வண்ண வண்ண கனவுகளுடன்
உன்னுடன் சஞ்சரித்து
கொண்டுதானிருக்கிறேன்
யாருமில்லா அகிலத்தில்

அத்தனை எளிதில்
என்னால் கடக்கமுடியவில்லை
உன்னை போல்
கடந்து செல்ல
காலம் உதவலாம்

இந்த ஜென்மம் முழுவதும்
உன் நினைவு
என் மனதில் தங்கியிருந்தால்
போதும்

மீசை நரைத்திடும் வேளையும்
உன் மீதான என் காதல்
மறையாது

நம்பிவிடாதே

நம்பிவிடாதே
என்னையும் நல்லவன் என
நம்பிவிடாதே

உன்னை அறியாமல் உன்
இதயத்தை சிறைபிடித்தவன்
நான் நம்பிவிடாதே

நம்பிவிடாதே
அன்பே நம்பிவிடாதே
நீ இன்றி நான் வாழ்வேன் என
ஊர் சொன்னாலும்
நம்பிவிடாதே

நம்பிவிடாதே
பெண்ணே
நம்பிவிடாதே
கவிதைக்குள் பொய்
இருந்தால் தான் அழகு
என நம்பிவிடாதே

விடாதே
உயிரே
விடாதே
வாழ்வில் நமக்குள்
சண்டைகள் பல வந்தாலும்
உயிரை  நீ விடாதே


Sunday, March 11, 2018

சிந்திக்கிறேன்

சிந்திக்கிறேன்
அசோகர் மரம் நாட்டார்
என பாடத்தில் படித்த
தினத்தை எண்ணி

சிந்திக்கிறேன்
வேப்பரத்தில் பேய் ஒண்ணு
நிக்குதுனு சொல்லிய பாட்டி
வெள்ளிக்கிழமை
சாமினு சொல்லி வேப்பிலையை
பறித்து வீட்டில் தோரணம் கட்டிய
தினத்தை எண்ணி

சிந்திக்கிறேன்
நண்பனோடு கல்லெறிந்து
மாங்காய் பறித்து உண்ட
தினத்தை எண்ணி

சிந்திக்கிறேன்
பெயர் தெரியா மரங்கள்
என் சாலைகளில்
நிழல் தர என வளர்த்த
என் முன்னோர்கள் இருந்த
தினத்தை எண்ணி

சிந்திக்கிறேன்
அரசமரம், வேப்பமரம் , ஆலமரம்
எல்லாம் என் வாழ்வோடு
கலந்திருந்த
தினத்தை எண்ணி

சிந்திக்கிறேன்
மழை பெய்ய
சாலையோர மரத்தின் அடியில்
ஒதுங்கிய
தினத்தை எண்ணி

சிந்திக்கிறேன்
வேறுகிரகத்தில் தண்ணீர்
தேடும் நம் விஞ்ஞானிகளின்
அறிவை  எண்ணி

சிந்திக்கிறேன்
நீர் தேங்க அமைத்த
குளத்தையும் ,ஏரிகளையும்
பல அடுக்குமாடி வீடு கட்ட
அனுமதித்த அதிகாரிகளின்
அக்கறை எண்ணி

சிந்திக்கிறேன்
அதிகப்படியான நீர்
இருந்தும் அடுத்த மாநிலத்திற்கு
தர யோசிக்கும்
அரசியல்வாதிகளின்
நிலை எண்ணி

வீட்டின் அருகில் இருந்த
மரங்கள் எல்லாம் வெட்டி
வீட்டினுள்  அழகுக்காய்
பொன்சாய் மரம் வளர்க்கும்
நம் மக்களின்
சமூக அக்கறை எண்ணி

சிந்தித்து சிந்தித்து
என் நாவறண்டு
போனதால்
என்னருகில் இருந்த
குவளையை
கவிழ்க்க
மீதி இருந்த கடைசி சொட்டு
தண்ணீர்
என் தாகத்தை
தனித்திடுமோ
என சிந்திக்கிறேன்


Saturday, March 10, 2018

அணைத்துக்கொள்

என்ன சொல்ல
பழகினால் பிரிந்திடுவாய் ஒருநாள்
என தெரிந்தும் பழகினேன்

பிரிந்தால் அவ்வலி
மரணம் போல் இருக்கும்
என நினைத்திருக்கவில்லை

ஒரு கனம்
நினைத்திருந்தால்
மரணத்திருப்பேன்
விழிமூடி
வலித்திருக்காது

நேசித்தவர் ஏற்படுத்தும்
வலி போல் எதிரி கூட நமக்கு
தரமுடியாது
அது என் எதிரிக்கும் வர கூடாது

பிழைத்திருக்கிறேன்
என்னை பெற்ற
தாய் தந்தைக்காக
என்னை பிரியும் வலி
அவர்களுக்கு கொடுக்க
விரும்பவில்லை நான்

மரணம் அவர்களை
நெருங்கும் நேரம்
காலா, என்னையும்
அணைத்துக்கொள்

காத்திருக்கிறேன்

Wednesday, March 7, 2018

பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்

என்னை ஈன்றெடுத்த அன்னைக்கும்
மண்ணில் நான் பிறந்த நாள் முதல்
இன்றுவரை நான் சகோதரி என்றழைத்து
அன்பால் அரவணைத்தவருக்கும்

மைல்கல் பலகடந்திருப்பினும்
அரட்டைஅரங்கத்தில் கண்டால்
அன்பாய் விசாரிக்கும் என் தோழிகளுக்கும்

என்னை விரும்பி வெறுத்தவருக்கும்
என்னை வெறுத்து பின் விரும்பிய
அத்தனை
பெண் நல் உள்ளங்களுக்கும்

எங்கள் வாழ்வில் தினம் நீங்கள்
கலந்திருப்பினும்
நீங்கள் இல்லையேல் ஆண்கள்
நாங்கள் இல்லை என
உணர இந்நாள் ஒரு பொன்னாளாய்

என் இனிய பெண்கள் தின
நல் வாழ்த்துக்கள்

Sunday, March 4, 2018

இவர்கள் யார் ?



துப்பாக்கி முனைகள்
என்னை நோக்கி
பிடித்திருக்கும்
இவர்கள் யார் ?

வானத்திலிருந்து
இறங்கும் பலூன்கள் போல்
குண்டுகளை இறக்கும்
இவர்கள் யார் ?

நேற்றுவரை என்னை
பாலூட்டி வளர்த்த
தாயையும்
என்னை நெஞ்சுக்குள்
அணைத்து கொஞ்சிய
என்ன தந்தையையும்
நான் சிரிப்பதை கண்டு
ஆனந்தம் கொண்ட
என் சகோதரனையும்
கொன்ற
இவர்கள் யார் ?

சொந்த நாட்டிலே
இந்த நிலை எனில்
உயிரை கையிலேந்தி
அகதியாய் அந்நிய நாட்டில்
கரையேறிய என் சொந்தங்களின்
நிலை பற்றி எண்ணாத
இவர்கள் யார் ?

மனித வளத்தை விட
எண்ணெய்  வளத்தை
உயர்வென நினைக்கும்
இவர்கள் யார் ?

நிச்சயம் மனிதர்கள்
அல்ல
பசிக்காக வேட்டையாடும்
மிருகமும் அல்ல
இவர்கள் யார் ?

Friday, March 2, 2018

புறா



ஒரு நாள் இரவு
வீட்டில் எல்லாரும்
அமர்ந்து தொலைக்காட்சி
கண்டுகளித்திருந்த நேரம்

வாசலில் ஒரு ஒலி கேட்டு
சென்று பார்த்தால் -அங்கு
பூனையிடம் இருந்து
தன்னை காக்க போராடிய
ஒரு அடிபட்ட புறா

அதை பிடித்து சிறுது
என் அம்மாவின் மருந்து
இட்டு துணி எடுத்து கட்டிட்டாள்

வேடன் தான் அம்பெய்தானோ
இல்லை
ஆடவன் தான் கல் எறிந்தானோ

கேள்விகள்ஆயிரம் இருந்தும்
யாரிடம் தான் கேட்பது

அடுத்த நாள் முதல்
பயிரும், பொட்டுகடலையும்
அதற்கு உண்ண  கொடுப்பதே
என் வேலையாயிற்று

பழக பழக
அடுக்களைக்குள்ளும்
அதன் சாம்ராஜ்ஜியம்

பள்ளி முடிந்து வீடு வந்ததும்
பேசிக்கொண்டிருப்பேன்
அதை அடைத்து வைப்பதில்லை

ஒரு நாள் வீட்டில் அனைவரும்
வெளியில் சென்று திரும்புகையில்
காணவில்லை

எங்கு சென்றதோ ? என்ன ஆனதோ ?
கவலையில் கரைந்தோடின
பல நாட்கள்

இதோ இன்று மழை சாரலில்
ஒதுங்கிய ஒரு ஜோடி புறா
என் வீட்டு ஜன்னலில்

நீண்ட நாள் பிரிந்த
நண்பனை கண்டா உணர்வு

பொட்டுக்கடலை எடுக்க
ஓடுகிறேன் ..
அடுக்களைக்கு
.....