Tuesday, March 20, 2018

புரியாத புதிர் !

கடவுள் இல்லை!
கடவுள் இருக்கிறார்!
கடவுள் இருந்தால் அவர் யார் ? எங்கிருப்பார் ?

ஏன் என் துன்பங்களில்
அவர் வருவதில்லை

வருகிறார் பள்ளிக்கூடத்தில்
ஆசிரியர் எல்லாருக்கும்
ஒரே போல் தான் கற்பிக்கிறார்
பின் எப்படி ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மதிப்பெண்கள் ?

கடவுள் காற்றை போல்
எங்கும் வியாபித்திருக்கிறார்
தேவைப்படுபவன்
மின்விசிறி  வைத்து கொள்கிறான்

அதனால் எங்கும் வியாபித்திருக்கும்
காற்று இல்லாமல் போகுமோ?!
இல்லை என்றால் அது தர்மமாகுமோ ?



ஏன் இந்த கொலை கொள்ளை
நடக்கிறது
கடவுள் இல்லை என்றான்

இது தவறு என்று தெரிந்தும்
வருந்தாமல் , புகைப்படம்
எடுத்து பகிர்ந்து கொள்ளும்
அவன் மனிதன் இல்லை
என்று நான் சொன்னால்
இல்லை
என்றாகுமோ ?

கடவுள் இல்லை என்பவர்கள்
அவரை தேடி பார்த்ததுண்டா ?
கடவுள் எப்படி இருப்பார்?

தண்ணீர் எந்த உருவத்தில் இருக்கும் ?
அது எந்த வடிவ பாத்திரத்தில்
வைக்கிறாயோ அந்த வடிவத்தில்
காட்சியளிக்கும்

அதுபோலவே கடவுளும்
நீ எதுவாக நினைக்கிறாயோ
அதுவாகிறாய்

எல்லாம் ஏற்றுக்கொள்ள
கூடியதாய் இருக்கிறதா ?

ராக்கெட் விண்ணில் பறக்கவிடுமுன்
இறைவனை வணங்கும்
விஞ்சானி சொல்வான் இறைவன்
இருக்கிறானோ என...?!


நம்பியவனுக்கு கடவுள்
நம்பாதவனுக்கு வெறும் சிலை
விடை தேட முயற்சிப்பவனுக்கோ
புரியாத புதிர் !


No comments: