நமக்கான உரையாடலில்
முதலில் பேசியது
நீயே !
நண்பனாய் எனை கண்டு
மின்னஞ்சல் அனுப்பி
என்னை மகிழ்ச்சியில்
ஆழ்த்தியது
நீயே !
நிதர்சனம் உன் கவிதை
வரிகளாக்கி எழுதுபவள்
நீயே !
குயில்களும் வெட்கம்
கொள்ளும் குரலில்
நிகழ்ச்சியை நடத்துபவள்
நீயே !
பட்டிமன்றத்தில்
உன் பேச்சால்
எங்களை ஆச்சர்யப்படுத்துபவள்
நீயே !
அன்பென்ற மாலையில்
கோர்த்த முத்தொன்று
உதிர்ந்ததெண்ணி
கோர்த்துவைத்த மற்ற முத்துக்கள்
சிதறுமோ என அஞ்சுபவள்
நீயே !
பல திறமை உனக்குண்டு
பல நட்புக்களும் இங்கு உனக்குண்டு
உன் நட்பெனும் மாலையில்
உதிராத நட்பாய் என்றும்
நானுண்டு என்
அன்பு தோழி நியா !!!
No comments:
Post a Comment