Wednesday, May 31, 2017

யார் இவள் -7

என் இதயத்தில்  இருக்கும் அவளை
தேடுவதும்  ஒரு சுகம் தான்

ஆனால் அந்த சுகம் இப்போது இல்லை
என்ன ஆயிற்று அவளுக்கு மனம்
கேள்விகள் ஆயிரம் மனதில் இருந்தும்
பதில் ஒன்றும் வர  மறுக்கிறது

அழைப்பான் அழுதிக்கொண்டிருக்கிறேன்
என்னை மனம் போல் அதுவும் கதறுகிறது

சில நிமிட நேரம் கடந்து நிறுத்தினேன்
அவள் அறை தோழியுடன் சென்றிருப்பாள்
என நினைத்து என் அறை திரும்ப எத்தனிக்கையில்
கதவு மெல்ல திறந்தது

அவளை கண்டதும் என் மனம் உறைந்தது
திக்பிரம்மை பிடித்தது போல் ஆனேன்
காரணம் அவள் நின்ற தோற்றம்

தலைவிரித்தபடி காலையில் உடுத்தியிருந்த
அதே உடை தான் - பொலிவிழந்து
நிலவை சூழ்ந்த கார்மேகம் போல முகம்
கண்ணீர் வற்றி காய்ந்து போன கன்னங்கள்
பாதி விழித்த கண்கள்

சில நேரம் சென்று தன்னிலை உணர்ந்து
கேட்டேன் அவளிடம் என்ன ஆயிற்று ?

மின்விளக்கை   எரிய செய்து வீட்டினுள்
அழைத்தாள் அவளின் பின் சென்றேன்
நாற்காலியில் அமர்ந்தேன் மௌனம் மட்டும்
அவளிடம் இருந்து ..

மீண்டும் கேட்டேன் என்ன ஆயிற்று உனக்கு
ஏன் இந்த கோலம் சொல் என்றேன்
வாய் திறந்தாள் .துக்கம் தொண்டையை
அடைத்தது கண்ணீர் வற்றியதால் எட்டி கூட
பார்க்கவில்லை கண்களில்

புதிய இடம் வந்ததும் அறையில் யாரும் இல்லை
"ஒரு வாய் சாப்பிடு" என்று சொல்ல கூட அம்மா இல்லை
செல்ல சண்டை இட என் சகோதரி இல்லை
என்னூடன் விளையாட அவள் குழந்தை இல்லை
என்னை பார்த்து கொள்ள யாரும் இல்லை
அனாதை போல் உணர்ந்தேன் ஒரு கணம்

துக்கம் என்னை அணைத்து கொண்டது
கண்ணீர் நான் இருக்கிறேன் என ஆறுதல் சொல்ல
என் கன்னங்களுடே வழிந்தோடியது
பசி என்னை  ஆட்கொண்டது
உறக்கம் என்னை வென்று விட்டது
எப்போது உறங்கினேன் தெரியவில்லை
அழைப்பு மணி கேட்டு உணர்ந்தேன் என்றாள்

அடி பைத்தியக்காரி  என்னை தொலைபேசியில்
அழைத்திருக்கலாமே என்றேன் !
அவளிடமிருந்து பதில் இல்லை

ஆம் நான் யார்?  யோசித்தேன்
அவள் சொன்ன உறவுகளில் நான் இல்லையே !
பின் எப்படி நினைத்து அழைப்பாள் என்னை ..?

எதுவாயினும் அவள் என் தோழி ஆயிற்றே
முகம் கழுவி புறப்பட்டு வா
நாம் வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம் என்றேன்

வெளியில் வந்து கதவு பூட்டி நடந்தோம்
தெருவில் இரு நிலா என்னுடன்
ஒன்று வானத்தில் இன்னொன்று
என் அருகில் என்னுடன்


 ----பயணம் தொடரும் ---

Tuesday, May 30, 2017

யார் இவள் -6

சிறுவர் கையில் குச்சி ஐஸ்
கொடுத்து அது வாயில் வைக்கும் முன்
உருகி விழுந்தது போல்
பயணம் தொடங்கியதும்
ரயில் நின்றது ..

கையில் இருந்த முகவரிக்கு
வாடகை சீருந்தில் அமர்ந்து
பயணம்

மதியம் எங்களுக்காய் காத்திருந்தார்
எங்கள் அலுவல பணியாளர்
அவள் தங்க பெண்கள் தங்கும்  வீடு
அங்கு அவளுக்கு தெரிந்த இரு பெண்கள்
தான் வசித்தனர்

அவளுக்கு வீட்டை காண்பித்து
சிறிது தூர பயணத்தில் என் அறை வந்தது

அது ஒரு ஞாயிற்றுக்கிழைமை ஆதாலால்
அறையில் யாரும் இல்லை

இளைப்பாற மின்விசிறியை சுழற்றினேன்
சுற்றியது மனதில் பெற்றோரை பிரிந்த ஏக்கமும்
அவளை  மீண்டும் காணும் ஏக்கமும் சேர்ந்து

சூரியன் மெல்ல தான் கடப்பேன்  என்கிறான்
என் அவசரம் அவனுக்கு எங்கு புரியும்

மாலை வரை காத்திருந்து அவளை சந்திக்க
அவள் அறைக்கு சென்றேன்

அழைப்பு மணி அடித்தால் யாரும் வரவில்லை
வெளியிலோ அவள் பாதணி
தொலைபேசியோ சினுங்க மறுக்கிறது


சொர்கமோ நரகமோ
இன்பமோ துன்பமோ
மணிக்கொருமுறை தர
அவளால் மட்டும் எப்படி முடிகிறது

எங்கு சென்றிருப்பாள்  அவள் ?

Sunday, May 28, 2017

மழை !

வானத்தில் உள்ள சொர்க்கத்தை
பூமியிலுள்ளவர்கள் காண இறைவன்
அனுப்பி   வைத்த  வரமே
மழைத்துளிகள்

சின்ன குழந்தையாய் இருந்த போ து
பாட்டியின் மடியில் உட்கார்ந்து
முற்றத்தில் கொட்டும் மழைத்துளியை
ரசித்தேன்

சிறிது வளர்ந்ததும் அதில் நனைய ஆவல்
கொண்டு நண்பர்களுடன் ஆடி பாடி நனைத்தேன்
அம்மாவிடம் திட்டும் வாங்கினேன்

மழை வந்ததால் பள்ளிக்கு விடுமுறையாம்
கூட்டி செல்ல அப்பா வந்தார் பள்ளிக்கு
அப்பாவின் குடையில் அவருடன் ஒரு பயணம்
வீட்டிற்கு வரும் வழியில் சூடான தேநீர் பருகினோம்

வீட்டில் அம்மா எங்களுக்காய் சூடாக வடை
செய்து காத்திருந்தாள் ..ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுகையில்
வானத்தில் இடி இடித்தது ..தலையில் தான் விழுமோ என்று
பயத்தில்கட்டி பிடித்து கொண்டோம் அம்மாவும் நானும்

பாட்டி ஏனோ அர்ஜுனனை துணைக்கு அழைத்த படி
கண்மூடி இறைவன் நாமத்தில் இருந்தார்

அப்பா சிரித்தபடி எங்களை கவனித்து பார்த்து கொண்டு இருந்தார் ..


குளிர்ந்த காற்று
கொட்டும் மழை
ஜன்னலோரத்தில் சாரல் அடிக்கும் மழை துளி
கையில் சூடான தேநீர்
உடன் குடும்பம்,

சுவர்க்கம் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்










Saturday, May 27, 2017

யார் இவள் -5

பயணசீட்டை  அவள்
கொண்டு வந்த உடைமைகள்
அனைத்திலும் தேடினாள்
 தன்  உடன்பிறந்தவன்
தன்னுடன்  கொண்டு சென்றதை
அறியாத பேதை

குடும்பத்தை பிரிந்தபோது
விழியோரம் எட்டி நின்ற
கண்ணீர் இப்போது அவள்
கண்ணங்களூடே பயணத்தை
தொடர்ந்தது

என் மனது கனத்தது
இரு பரிசோதகரிடம் பேசுவோம்
என்று சொல்லி அவரிடம் சென்றேன்

எங்களது நிலையை சொன்னேன்
முதலில் மறுத்த அவர் பின்
என்னையும் அவளையும்
மாறி மாறி பார்த்தார்
என்ன நினைத்தாரோ
மனம் மாறி சம்மதித்தார்

மீண்டும் ஒரு கேள்வி எழுப்பினார்
ரயில் நிலையத்தின் பரிசோதகரிடம்
என்ன சொல்வீர் என ?

விழிபிதுங்கி நின்ற வேளை
ஒரு சீட்டில் எழுதி
கையொப்பமிட்டார்
இதை வைத்துகொள் என

இறைவன் இருப்பதாய் நம்பும்
நான் இன்று அவர் உருவில் கண்டேன்

விஷயத்தை அவளிடம் சொல்ல
பிறையில் வளரும் நிலவு போல் 
அவள் மெல்ல புன்னகைத்தாள் 


அந்த பயணத்தில்
என்ன பேசினோம் நினைவில்லை
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்

இந்தஅனுபவம் தனிஒருவிதம் 

மலரும் வளரும் பல நாள் தொடரும்


தொடரும்


Friday, May 26, 2017

யார் இவள் -4

வேலையில் ஊர் மாற்றம்
என் மனதில் தடு மாற்றம்

பெற்று வளர்த்த பெற்றோரை
பிரிந்ததில்லை இதுவரை நான்

என் தாயை பிரிந்து செல்ல வேண்டுமா
இல்லை
என் தோழி உடன் வருகிறாள் என
ஆனந்தம் கொள்ள வேண்டுமா

துக்கத்தையும் மகிழ்ச்சியையும்
ஒருசேர தர பெண்களால் தான்
முடியும் போலும்

தந்தையின் உபதேசம் பெற்று
போகலாம் என முடிவு கொண்டேன்

எனக்கான பயணசீட்டு என் கையில்
அவளுடையது அவள் கையில்

விடியற்காலை புறப்படும் ரயில்
இரு வேறு மனநினையில் உள்ள
எங்களை சுமந்து

என்னை வழியனுப்ப யாரும் வேண்டாம் என
சொல்லிவிட்டேன் -என் தாய் அழுவாள்
என்பதால் பார்க்கும் பலம் எனக்கு இல்லை

நேர்மறை எண்ணம் அவளுடைய வீட்டில்
புது பெண்ணை கணவன் வீட்டிற்கு அனுப்பும்
நிகழ்வு போல்  - வழியனுப்ப வீட்டிலுள்ள அனைவரும்
வருகை ரயில் நிலையத்தில்

எனோ அவள் தந்தை வரவில்லை
அம்மா , சகோதர சகோதரிகள் மற்றும்
அவர்களின் வாண்டுகள் சூழ் அமர்ந்திருந்தாள்
மணிமேகலை

ரயில் புறப்படும் நேரம் பச்சை வண்ண கொடி
அசைக்க பட்டது -  அனைவரையும்
இறங்க சொன்னேன் சீக்கிரம்

அவள் தாய் என்னிடம் சொன்னாள்
இவளை பிரிந்து நின்றதில்லை நாங்கள்
இனி இவளை நீ கொஞ்சம் பார்த்து கொள் என

ரயில் கூவி புறப்பட்டது
உறவுகள்  மெல்ல பின் நோக்கி
நகர்ந்தனர் ஜன்னலில் ,
அவள் விழி ஓரத்தில் கண்ணீர்
அவளும் பெண் தானே !!

சிறிது நேரத்தில் பயணசீட்டு
சரிபார்க்கும் பரிசோதகர் வர  -
நான் என் சட்டைப்பை யில் இருந்து
எடுத்து கொடுத்தேன் 

அவளுக்கான சீட்டு கேட்க 
அவள் தேட துடங்கினாள் 


-----பயணம் தொடரும் ----

Thursday, May 25, 2017

யார் அவள் -3

காலங்கள் காயங்கள்
ஆற்றும் என்று நம்பி
வாழ்வது தானே வாழ்க்கை
அதற்கு நானும் தப்பவில்லை

நாட்கள்உருண்டோடின
அவள் கண்கள் என் கண்களை
சந்திப்பதில் இருந்தும்  தப்பியோடின

உச்சி வெயிலில் நடந்து வந்தவனுக்கு
பானையில் பிடித்த மோர் கொடுத்தால்
குளிரும் மனம் போல் உணர்ந்தேன்

ஆம்,
அவள் என்னை நோக்கி  வந்துகொண்டிருந்தாள்
ஆனால்
வந்தவள் கொண்டுவந்தது விஷம் என அறியாமல்

மேலதிகாரி அழைப்பதாய்  சொன்னாள்
அவரிடம் சென்றோம் -என்னை
பெங்களூருக்கு மாற்றுவதாய் உத்தரவு

அவள் முகத்தில் மகிழ்ச்சி புன்முறுவல் பூத்தாள்
என் முகமோ வாடிய மலர் போல் ஆயின

இறைவன் இருப்பதாய் என்றும் நம்பும் நான்
இன்று இல்லை என்று நிந்தித்த வேளை -
மேலதிகாரியின் அடுத்த உத்தரவு என்னுடன் பயணிக்க
மணிமேகலையும் வருவாள் என -

மலர்ந்த அவள் முகம் சுருங்ககண்டு கண்டுகொண்டேன்
அவள் பெயர் மணிமேகலை 


மணிமேகலையுடன் பயணம் தொடரும் 

Tuesday, May 23, 2017

யார் இவள்

பொழுது விடிந்தது என
கூவியது சேவல்
அவளை காண
மனதில் ஆவல்

மேற்பார்வையாளர் வேலை
அலுவலில் மூழ்கினேன்
ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில்
"தவறு கண்டேன் "


ஆம் "கண்டேன் " தவறாய்
அவள் பார்வையில் நான்

மேலதிகாரியின் கண்டனத்தில்
அவள்- அதற்கு காரணம் நான் என
அவள் விழி சுட்டது என்னை

மேலதிகாரியின் பார்வையில்
ஒரு பெருமிதம்
அவள் பார்வையில் வெறும்
கசக்கி போட்ட காகிதம்
நான்

தோழன் என கண்ட கண்கள்
ஓர் இரவில்
எதிரியாய் கண்டன

அன்றைய பொழுது உணவு 
இறங்கவில்லை இருவருக்கும் 


அவளின் முன்முறுவல்
கானல் நீராய் ஆயின

மாறி போன பாதையில்
வழி தெரியாமல் நிற்கும்
வழிப்போக்கனாய் நான்


-----பயணம் தொடரும் ---

Monday, May 22, 2017

நட்பின் பிரிவு

தோழா என்று அவள் பழகினாள்
தோழி என்று நானும் பழகினேன்!

உண்மை நட்பை விளங்க முடியாத சிலரால் பிரிந்தோம்!

அன்றுதான் தோன்றியது -
காதலின் பிரிவை விட
நட்பின் பிரிவு
மிகவும் கொடுமையானது என்று!

யார் அவள் - 1

கல்லூரி காலம் முடிந்து
எதிர்காலம் பற்றிய
கலக்கம் கொண்டு
வேலை தேடி அலைந்து நொந்து
கிடைத்தது எனக்கான ஒரு வேலை

முதல் நாள் அலுவலகம் ,
முகமறியா ஒரு நூறு ஜோடி
கண்கள் -என்னை வேற்று கிரகத்து
மனிதனாகவே கண்டது

அதில்
ஒரு ஜோடி கண்கள் மட்டும் எனை
தோழனாக கண்டது - ஆம்
அது தான் நாங்கள் சந்தித்த நாள்

உதடுகள் மலர்ந்தது அதற்கு மேல்
வேலை மறைத்தது ..

ஓரிரு நாட்கள் எங்கள் முன்முறுவல்
மட்டும் பரிமாறி கொண்டோம்

பெயர் கேட்க கூட தயக்கம் -மனதில்
இனம் புரியா கலக்கம்

எதுவாக இருக்கும் அவள் பெயர்
அவள் மனதில் யாராக இருப்பேன் நான்

இரவு உறக்கம் பறித்தாள் அவள் -
உடன் பணிபுரியும் ஆண் ஒருவனை
கேட்கலாம் எனில் என்னை பற்றி
என்ன நினைப்பானோ

சிந்தனை கடந்ததில் நிலவும்
கடந்து சென்று விட்டது
ஆம், விடிந்து விட்டது என
சேவல் கூவிவிட்டது


--தொடரும் ---
உங்களுக்கு பிடித்திருந்தால் ?!


Sunday, May 21, 2017

உதவு ...

எதிர்பார்ப்பில்லாமல் வாழ
கற்று கொள்கிறேன்
ஏமாற்றம் கற்று தந்த பாடம்

நீ நலமா என கேட்கும்
நட்பு கிடைப்பது எளிது

நீ நலமில்லை எனினும்
நட்பு தொடர்வது வலிது

நன்றியுள்ள ஜீவன் யார் என்றால்
இன்றும் சொல்கிறோம் "நாய் என்று
நாம் நன்றியில் நாயை இன்னும்
மிஞ்சவில்லை போலும் ...

ஐந்தறிவு ஆறறிவு பெற்ற
நம்மை விட உயர்ந்தே இருக்கிறது
உதவுவதில்

தாகம் போக்க உன் வீட்டு முற்றத்தில்
ஒரு குவளை தண்ணீர் -அது போதும்
ஐந்தறிவிற்கு நீ செய்யும் நன்றி கடன்!

அழும்போது ஆறுதல் சொல்லும்
ஓரிரு வார்த்தை போதும்
ஒருவனுக்கு நீ செய்யும் பொருளுதவியை விட
அது பெரிதாகும் ....

துவண்டு விழும்போது
தாங்கிகொள்ளும் உன் ஒரு கரம்
போதும் நான் விண்ணையும் கடப்பேனே !

தோழா ,
வாழ்க்கை என்பது சாகும் வரை வாழ்வதல்ல
மற்றவர் மனதில் நாம் வாழும் காலம் வரையே

வாழ்வதற்கு உயிர் மட்டும் தேவை இல்லை
பிறருக்கு உயிராய் இருந்தும்  உதவு ...

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது.

Wednesday, May 17, 2017

வேடிக்கை மனிதன் !

வேடிக்கை நிறைந்தது நம் வாழ்க்கை
தோழா ,

இரவை பகலாக்க நினைத்து உழைத்து
பகலை இரவாக்கி உறங்கினான்

முகபுத்தகத்தில் ஆயிரம் நண்பர்களாம்
பக்கத்துக்கு வீட்டில் குடியிருப்பவரின்
முகமறியாதவன்

பத்தினியின் பெயர் சொல் என்றேன்
சிறிது யோசித்து சொன்னான் கண்ணகி என்று
அவன் வீட்டு பத்தினியின் பெயர் தெரியவில்லை போலும்

பெண் நாணத்தால் தலை நிமிராமல் நடந்த காலம் போய்
இன்று ஆணும் தலை நிமிராமல் நடக்கிறான் உடன் -தன்
தொலைபேசியை தடவி கொண்டு

ஆடை கிழிந்து ஒருவன் நடந்து வந்தால் அவனை
அருவருப்பாய் பார்க்கிறான் -அவனே
உயர் ரக வாகனத்தில் வந்து இறங்கினால்
அதிசயமாய் பார்க்கிறான்

ஊர் உறவை மறந்து , புது உறவை வளர்த்து
பெற்றோரின் மனம் குளிர ஓரிரு வார்த்தைகள்
பேசாமல் -முகமறியா உறவோடு பல மணி நேரம்
 தூங்காமல் விழித்திருந்து பேசும் உன் வாழ்க்கை
வேடிக்கை நிறைந்தது தான் தோழா ...


Saturday, May 6, 2017

பயமாய் தான் இருக்கிறது


பயமாய் தான் இருக்கிறது

ரோட்டில் பிச்சை எடுக்கும்
பிச்சை காரியிடம் இல்லை
என சொல்கையில்

பயமாய் தான் இருக்கிறது

சுயநலமான நண்பனுடன்
பயணிக்கையில்

பயமாய் தான் இருக்கிறது

நிலவு போல் அவள் இருக்க
நிலவின் நிழல் போல இருக்கும்
நான் காதல் சொல்கையில்

பயமாய் தான் இருக்கிறது

நான் இல்லாமல் நீ இருப்பாய் -ஆனால்
நீஇல்லா நாட்களில் நான் வாழ்வதை எண்ணி

பயமாய் தான் இருக்கிறது

புதிதாக யாரேனும் பாசமாக
பேசுகையில்

பயமாய் தான் இருக்கிறது

நேசத்திற்காக நான் பழக
தேவைக்காக

பயமாய் தான் இருக்கிறது

ஏமாற்றுவதாய் நினைப்பவர்கள் முன்
ஏமாறுவதாய் நடிக்கையில்

பயமாய் தான் இருக்கிறது

கவிதை என்று எழுதியதை
நம்பி படிக்கும் உங்களை
எண்ணி



Monday, May 1, 2017

உயிர்

மருத்துவர் சொன்னதும்
ஆனந்தம் சூடி கொண்டேன்
என் கணவரிடம் சொல்ல
வெட்கம் சூடி கொண்டேன்
சொன்னேன் அவரிடம்
நான் தாய்மை அடைந்தேன் என

என் காதலை சொன்ன
நேரம் போல் ஆனந்தம் அடைந்தார்


தொடங்கியது எங்கள் பிள்ளைகளுக்கான
எங்கள் தேடல்
பெயர் தேர்வு முதல் குழந்தையை சேர்க்கும்
பள்ளி தேர்வு வரை  ஆயிற்று

குழந்தையை மார்பில் போட்டு
தாலாட்ட கற்று கொண்டேன் நூறு பாடல்

அக்கறையாய் மருத்துவரிடம் கூட்டி  சென்றார்
மாதமொருமுரை. குழந்தையின்  இதய துடிப்பு
கேட்டேன்

பத்து மாதம் கடந்தது வெளியுலகு வந்து
தன்தந்தையை காணும் ஆவலில்  -எட்டி  உதைத்தான்
என் வயிற்றில்

ஆனந்த வலியில் மருத்துவமனை சென்றேன்
அருகில் அன்பாய் என் கை  கோர்த்து என் தலை கோதி
என் கணவர்

பிரசவ அறையில் நான் துடிக்க -
வெளியில் நின்று என் கணவர் துடிக்க

சொர்க்கமும் நரகமும் ஒரு சேர
அனுபவித்தோமே

ஆண் பிள்ளை என்றாலும் பெண் பிள்ளை
என்றாலும் கள்ளி பாலுக்கு இடம் இல்லை
என்றிருந்தோம்

கடைசியில் கள்ளி பால் எங்களுக்கு தந்து
சென்றாயே பிரசவ அறையை சவ அறையாக்கி

கண்விழித்தவளிடம் என்ன சொல்வேனோ !?