Sunday, May 21, 2017

உதவு ...

எதிர்பார்ப்பில்லாமல் வாழ
கற்று கொள்கிறேன்
ஏமாற்றம் கற்று தந்த பாடம்

நீ நலமா என கேட்கும்
நட்பு கிடைப்பது எளிது

நீ நலமில்லை எனினும்
நட்பு தொடர்வது வலிது

நன்றியுள்ள ஜீவன் யார் என்றால்
இன்றும் சொல்கிறோம் "நாய் என்று
நாம் நன்றியில் நாயை இன்னும்
மிஞ்சவில்லை போலும் ...

ஐந்தறிவு ஆறறிவு பெற்ற
நம்மை விட உயர்ந்தே இருக்கிறது
உதவுவதில்

தாகம் போக்க உன் வீட்டு முற்றத்தில்
ஒரு குவளை தண்ணீர் -அது போதும்
ஐந்தறிவிற்கு நீ செய்யும் நன்றி கடன்!

அழும்போது ஆறுதல் சொல்லும்
ஓரிரு வார்த்தை போதும்
ஒருவனுக்கு நீ செய்யும் பொருளுதவியை விட
அது பெரிதாகும் ....

துவண்டு விழும்போது
தாங்கிகொள்ளும் உன் ஒரு கரம்
போதும் நான் விண்ணையும் கடப்பேனே !

தோழா ,
வாழ்க்கை என்பது சாகும் வரை வாழ்வதல்ல
மற்றவர் மனதில் நாம் வாழும் காலம் வரையே

வாழ்வதற்கு உயிர் மட்டும் தேவை இல்லை
பிறருக்கு உயிராய் இருந்தும்  உதவு ...

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது.

No comments: