Monday, May 22, 2017

யார் அவள் - 1

கல்லூரி காலம் முடிந்து
எதிர்காலம் பற்றிய
கலக்கம் கொண்டு
வேலை தேடி அலைந்து நொந்து
கிடைத்தது எனக்கான ஒரு வேலை

முதல் நாள் அலுவலகம் ,
முகமறியா ஒரு நூறு ஜோடி
கண்கள் -என்னை வேற்று கிரகத்து
மனிதனாகவே கண்டது

அதில்
ஒரு ஜோடி கண்கள் மட்டும் எனை
தோழனாக கண்டது - ஆம்
அது தான் நாங்கள் சந்தித்த நாள்

உதடுகள் மலர்ந்தது அதற்கு மேல்
வேலை மறைத்தது ..

ஓரிரு நாட்கள் எங்கள் முன்முறுவல்
மட்டும் பரிமாறி கொண்டோம்

பெயர் கேட்க கூட தயக்கம் -மனதில்
இனம் புரியா கலக்கம்

எதுவாக இருக்கும் அவள் பெயர்
அவள் மனதில் யாராக இருப்பேன் நான்

இரவு உறக்கம் பறித்தாள் அவள் -
உடன் பணிபுரியும் ஆண் ஒருவனை
கேட்கலாம் எனில் என்னை பற்றி
என்ன நினைப்பானோ

சிந்தனை கடந்ததில் நிலவும்
கடந்து சென்று விட்டது
ஆம், விடிந்து விட்டது என
சேவல் கூவிவிட்டது


--தொடரும் ---
உங்களுக்கு பிடித்திருந்தால் ?!


No comments: