Friday, May 26, 2017

யார் இவள் -4

வேலையில் ஊர் மாற்றம்
என் மனதில் தடு மாற்றம்

பெற்று வளர்த்த பெற்றோரை
பிரிந்ததில்லை இதுவரை நான்

என் தாயை பிரிந்து செல்ல வேண்டுமா
இல்லை
என் தோழி உடன் வருகிறாள் என
ஆனந்தம் கொள்ள வேண்டுமா

துக்கத்தையும் மகிழ்ச்சியையும்
ஒருசேர தர பெண்களால் தான்
முடியும் போலும்

தந்தையின் உபதேசம் பெற்று
போகலாம் என முடிவு கொண்டேன்

எனக்கான பயணசீட்டு என் கையில்
அவளுடையது அவள் கையில்

விடியற்காலை புறப்படும் ரயில்
இரு வேறு மனநினையில் உள்ள
எங்களை சுமந்து

என்னை வழியனுப்ப யாரும் வேண்டாம் என
சொல்லிவிட்டேன் -என் தாய் அழுவாள்
என்பதால் பார்க்கும் பலம் எனக்கு இல்லை

நேர்மறை எண்ணம் அவளுடைய வீட்டில்
புது பெண்ணை கணவன் வீட்டிற்கு அனுப்பும்
நிகழ்வு போல்  - வழியனுப்ப வீட்டிலுள்ள அனைவரும்
வருகை ரயில் நிலையத்தில்

எனோ அவள் தந்தை வரவில்லை
அம்மா , சகோதர சகோதரிகள் மற்றும்
அவர்களின் வாண்டுகள் சூழ் அமர்ந்திருந்தாள்
மணிமேகலை

ரயில் புறப்படும் நேரம் பச்சை வண்ண கொடி
அசைக்க பட்டது -  அனைவரையும்
இறங்க சொன்னேன் சீக்கிரம்

அவள் தாய் என்னிடம் சொன்னாள்
இவளை பிரிந்து நின்றதில்லை நாங்கள்
இனி இவளை நீ கொஞ்சம் பார்த்து கொள் என

ரயில் கூவி புறப்பட்டது
உறவுகள்  மெல்ல பின் நோக்கி
நகர்ந்தனர் ஜன்னலில் ,
அவள் விழி ஓரத்தில் கண்ணீர்
அவளும் பெண் தானே !!

சிறிது நேரத்தில் பயணசீட்டு
சரிபார்க்கும் பரிசோதகர் வர  -
நான் என் சட்டைப்பை யில் இருந்து
எடுத்து கொடுத்தேன் 

அவளுக்கான சீட்டு கேட்க 
அவள் தேட துடங்கினாள் 


-----பயணம் தொடரும் ----

No comments: