Monday, May 1, 2017

உயிர்

மருத்துவர் சொன்னதும்
ஆனந்தம் சூடி கொண்டேன்
என் கணவரிடம் சொல்ல
வெட்கம் சூடி கொண்டேன்
சொன்னேன் அவரிடம்
நான் தாய்மை அடைந்தேன் என

என் காதலை சொன்ன
நேரம் போல் ஆனந்தம் அடைந்தார்


தொடங்கியது எங்கள் பிள்ளைகளுக்கான
எங்கள் தேடல்
பெயர் தேர்வு முதல் குழந்தையை சேர்க்கும்
பள்ளி தேர்வு வரை  ஆயிற்று

குழந்தையை மார்பில் போட்டு
தாலாட்ட கற்று கொண்டேன் நூறு பாடல்

அக்கறையாய் மருத்துவரிடம் கூட்டி  சென்றார்
மாதமொருமுரை. குழந்தையின்  இதய துடிப்பு
கேட்டேன்

பத்து மாதம் கடந்தது வெளியுலகு வந்து
தன்தந்தையை காணும் ஆவலில்  -எட்டி  உதைத்தான்
என் வயிற்றில்

ஆனந்த வலியில் மருத்துவமனை சென்றேன்
அருகில் அன்பாய் என் கை  கோர்த்து என் தலை கோதி
என் கணவர்

பிரசவ அறையில் நான் துடிக்க -
வெளியில் நின்று என் கணவர் துடிக்க

சொர்க்கமும் நரகமும் ஒரு சேர
அனுபவித்தோமே

ஆண் பிள்ளை என்றாலும் பெண் பிள்ளை
என்றாலும் கள்ளி பாலுக்கு இடம் இல்லை
என்றிருந்தோம்

கடைசியில் கள்ளி பால் எங்களுக்கு தந்து
சென்றாயே பிரசவ அறையை சவ அறையாக்கி

கண்விழித்தவளிடம் என்ன சொல்வேனோ !?

No comments: