Monday, December 14, 2020
சிக்கிய மனம்
உன்னிடம்
சிக்கிக்கொண்டது "பென்" மட்டுமல்ல "பெண்ணே" என் மனமும் தான் உன்னிடம் கடி வாங்கி சிக்கி சிக்கி எழுதுவது பென் மட்டுமல்ல பெண்ணே உன்னிடம் காதல் சொல்ல வந்த என் வார்த்தைகளும் திக்கி சிக்கி கொள்கிறது எனக்குள்Thursday, November 26, 2020
காத்திருக்கிறேன்
இன்னொருமுறை
நாம் சந்தித்துக்கொள்வோமென்றோ
இன்னொருமுறை
பரஸ்பரம் அன்பை
பரிமாறிக்கொள்வோமென்றோ
இன்னொருமுறை
வெட்க புன்னகை
எனக்குள் கடத்துவாயென்றோ
இன்னொருமுறை
செல்ல செல்ல
சண்டகையிட்டுக்கொள்வோமென்றோ
இன்னொருமுறை
உன் தோள் சாய்ந்து
ஆறுதல் அடைவேனென்றோ
இன்னொருமுறை
சிறிதாய் மட்டும் நமக்குள்
மௌனங்கள்
கடந்திடுமென்றோ
இன்னொருமுறை
உன் வருகைக்காக
காத்திருக்கிறேன்
Monday, November 2, 2020
தீபாவளி வருகிறது
அம்மாவிடம் சொல்லி
பலகாரம் சில செய்ய
சொல்ல வேண்டும்
அப்பாவிடம் சொல்லி
புது துணிமணி
வாங்க சொல்விட வேண்டும்
அண்ணாவிடம் சொல்லி
வெடிக்கும் பட்டாசு கொஞ்சம்
வாங்க சொல்லிட வேண்டும்
தங்கையிடம் சொல்லி
பாட்டு ஒன்னு பாட
அதை நாங்கள் ஒன்றாய் அமர்ந்து
கேட்டு ரசித்திட வேண்டும்
வர்ண பகவானிடம் சொல்லி
அன்று ஒரு நாள் மட்டும்
மழை வேண்டாமென
கேட்டிட வேண்டும்
நண்பர்களிடம் சொல்லி
ஓரிடம் சேர்ந்து
பேசி கழித்திட வேண்டும்
கடவுளிடம் சொல்லி
இக்கனவு
மெய்ப்பட தினம்
பிரார்த்தித்திட வேண்டும்
Tuesday, October 20, 2020
காலையில் கண்விழிக்கும் நேரம்
கண் தேடுகிறது
அருகில் உன்னை
காண
நடக்கையிலும்
உன்னை பார்த்தபடி
நடக்கவே மனம்
விரும்புகிறது
எங்கு பயணிக்கையிலும்
உன்னுடன் பயணிக்கவே
விரும்புகிறது
மனம்
விடை தெரியா
கேள்விக்கெல்லாம்
விடையாய் என்முன்
நீயே
நீ அருகில் இல்லா
நாட்கள்
நிலா இல்லா வானம் போல
இருண்டு விடுவதாய்
உணர்கிறேன்
நீ என்ன என் காதலியா
இல்லை
நீ அதற்கும் மேல்
என் செல்ல
தொலைபேசியே
இவ்வுலகத்தில்
விசித்திரமான
மக்கள் சிலர்
கீழ் உள்ள மக்கள் என்று
சொல்லி கோடு கிழித்து
கோடு தாண்டாமல்
பார்த்து கொள்கிறார்கள்
சிலர்
என மனிதனை பிரித்து
ஒதுக்கி விடுகிறார்கள்
சிலர்
என்று அதிகாரத்தை
கையில் எடுத்துக்கொள்கிறார்கள்
சிலர்
செயல்பட வேண்டும் என
தேர்தல் நெருங்கும் நேரம் மட்டும்
மக்களுக்கு உணர்த்தும்
சிலர்
நலத்திட்டங்களெல்லாம்
ஊடகத்தில் மட்டும் பரவுவதை
கொண்டாடும்
சிலர்
உங்கள் கால்களில் விழுந்தும்
கைகூப்பயும் ஒட்டு கேட்டு
5 வருடங்கள்
உங்களை ஊனத்தோடு
உலவ விடும் அரசியல்வாதிகள் என்று
சிலர்
தவறு செய்பவன்
எந்த நடிகனின் ரசிகன் என்றும்
எந்த கட்சியின் தொண்டன் என்றும்
ஊடகத்தில் விவாதமாக்கி
அவன் மனிதனல்ல
என்ற ஒன்றை மறந்து,மறைத்து
அடுத்த பிரச்சனைக்கு தாவும்
நடுநிலையை நிலை நாட்ட
போராடும் ஊடக துரோகிகள்
சிலர்
ராமன் ஆண்டாளும்
இராவணன் ஆண்டாளும்
எனக்கு கவலையில்லை
என் கவலையே எனக்கு போதும்
என முக்காடு இட்டுக்கொள்ளும்
சிலர்
அடக்குமுறை கண்டு
காந்தியும், காமராசரும், பெரியாரும்
அவ்வப்போது உருவாகிறார்கள்
நம்மிலிருந்து
சிலர்
நமக்கு இன்னும்
வேண்டும் இவர்களை போல
சிலர்
Tuesday, October 13, 2020
தாய்
பார்க்கவில்லை
நேசித்தாள்
Monday, October 12, 2020
ஒரு விதி செய்வோம்
போர்க்களத்திலே
எதிரிகள் சூழ்ந்திருக்க
நெஞ்சிலே வீரம் கொண்டு
கையில் வாளும், வில்லும் அம்பும் ,
ஈட்டியும் ஏந்தி
பகைவர்களின் தலைகளை
பகடைகளாய் வீழ்த்தி
நிமிர்ந்து நின்ற
என் குல பெண்கள்
சினமுற்றாள்
விரட்டினாள்
புலியை கூட
முறத்தால்
என் வீர தமிழ்பெண்
அன்று
இன்று
கையில் வாளும் இல்லை
ஈட்டியும் இல்லை
எதிரிகள் மட்டும்
கண்முன்னே
பற்பல
முகங்களில்
உன்னை சூழ்ந்து
நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்
கள்ளிப்பால் முதல்
கணினி வரை
உன்னை வீழ்த்த
திட்டங்கள் தான்
எத்தனை எத்தனை ..
சிலருக்கு
வாழ்க்கையில்
போராட்டம்
உனக்கோ
வாழ்க்கையே
போராட்டமாய்
பாரத மாதா
பூமி தாய்
தமிழ் தாய்
காவேரி,கங்கை என
பெண்ணை போற்றி வணங்கி
புத்தகத்தில் புதைத்துவிட்டோம்
நீதி தேவதையின்
கண்ணை கட்டிவிட்டோம்
கயவர்கள் தப்பித்து
எழுத கூட கூசும்
ஈன செயலை செய்தவனுக்கு
தையல் இயந்திரம் வாங்கவா?
பெண்ணே
நிமிர்ந்து நின்று
எதிரிகளை வீழ்த்த
சினம் கொண்டு
எழுந்து வா
பெண்ணே
உனக்காய்
ஒரு விதி செய்வோம்
Sunday, August 23, 2020
குழந்தையின் குமுறல்
பத்து மாதம் தான்
என்னையும் சுமந்து
பெற்றிருக்க வேண்டும்
நீ
எல்லா பிள்ளையும் போல
உன் வயற்றில் உதைத்து
விளையாடிருக்க வேண்டும்
நான்
எல்லா தாயையும் போல
எனக்காய் உன் ஆசைகளை
தியாகம் செய்து
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எனக்காய் சிந்தித்து
என்னை வலியினூடே
பிரசவித்திருக்க வேண்டும்
நீ
பிறந்த நாடு முக்கியம்
என்றுணர்ந்த நீ
பெற்ற பிள்ளைக்கு
உன் பாசம் முக்கியம்
என்று உணர
தவறியதேனோ ?
தோள் கொடுப்பான்
தோழன் சரி தான்
பெற்ற தாயின் பாசம்
தர இயலுமோ
என் யோசித்தாயா
நீ?
குழந்தையின் அன்பை உதறி
நீங்கள் சொல்லும் காரணங்கள்
எல்லாம் ரணங்களுக்கு
மருந்தாகாது
உறவுகளுக்குள்
சுவர் எழுப்பி
இறகுகளை உதிர்த்து
பறக்க சொல்லுகிறீர்கள்
என்னை
பறந்திடத்தான்
இயலுமோ ?
உங்களை நினைத்து
பீறிட்டு வரும்
என் அழுகையின் சத்தம்
குண்டுகள் தாங்கி பறந்து வரும்
போர் விமானத்தை விட
பேரிறைச்சல் கொண்டது
என அறிவாயா
நீ?
குற்றமே செய்யாத
எனக்கு ஏன்
வாழ்வதே தண்டனையாய்
தந்தாய்
நீ ?
Monday, August 10, 2020
கிறுக்கல்கள்
"வெளிச்சத்தை கண்டு
வரும் விட்டில்பூச்சியாய்
உன்னை கண்டதும்
காதல் கொண்டு வருகிறேன்
வீட்டில் பூச்சியாய் ஆகினும்
என்னை வைத்துக்கொள்ளேன்
உன்னுடன் "
******* ******* *********
"ஆறு தலை
முருகனை காண
வந்தேன்
ஆறுதலாய் இருந்தது
கண்டபின்
உன் முகம் "
******* ******* *********
"கதிரவன்
உதித்துவிட்டான்
ஊரடங்காம்
இன்று
எப்படி சொல்வேன்
தடுக்க முடியாதபடி
வந்து செல்லும்
உன் நினைவலைகலை பற்றி "
******* ******* *********
என் வீட்டில்
பால் திருடிய
உன் வீட்டு
பூனைக்கெல்லாம்
கொஞ்சி முத்தம் கொடுக்கிறாய்
என் இதயத்தை
திருடிய உனக்கு
என்ன தண்டனை
கொடுக்கலாம்
என யோசித்துக்கொண்டிருக்கிறேன்
******* ******* *********
உன்னை காணாத பொழுதில்
அனலில் இட்ட புழுவாய்
துடிக்கிறேன்
வந்து
உன் தாவணி தணலில்
எனக்கு ஓர் அடைக்கலம்
தருவாய் என
******* ******* ********
முத்தத்தின் போது
மட்டும் சிந்தும்
தேன்
அவள் உதடு
***** ***** ******
கண்ணாடி தோழன்
சின்னஞ்சிறு வயதில்
முதன் முதலில்
உன்னை பார்த்ததும்
ஆச்சர்யம் ஆட்கொண்டது
விளையாட்டு
தோழனாய் நீ
கையால் தொட எத்தனித்தேன்
முடியவில்லை
நான் சிரித்தால்
நீயும் சிரித்தாய்
நான் அழுதால்
நீயும் அழுதாய்
உணர்வுகளின்
பிரதிபலிப்பாய்
நீ இருப்பதாய்
காலம் எனக்கு
உணர்த்தியது
உன்னை காண்கையில்
அழகாய் தெரிந்தால்
என்னவளுக்கும்
அழகாய் தெரிவதாய்
உணர்ந்தேன்
ஏமாற்றம்
எனை ஆட்கொள்கையில்
உன்னிடம் தான் வந்து
அழுவேன்,
என்னை பிரதிபலிக்கும்
உன்னைக்காண்கையில்
கோவம் கொப்பளிக்கும்
எதிரில் இருக்கும்
உன்னை அடிப்பேன்
காயங்களும் வலிகளும்
எனக்கு
நிமிர்ந்து பார்க்கையில்
என் மனதை
போல்
துக்கு துகளாய்
சிதறியிருப்பாய்
சிதறிய துகள்கள்
ஒவ்வொன்றும்
என்னை பிரதிபலிக்கும்
Wednesday, August 5, 2020
Monday, August 3, 2020
Saturday, August 1, 2020
Friday, May 15, 2020
குயில்போல நீ !

குயில்போல நீ !
தொலைத்த உறவை
எண்ணி
பாடிக்கொண்டே
இருக்குமாம்
குயில்
உன்னை போல
ஆனால்
கேட்பவருக்கு
மகிழ்வை தரும்
குயில் பாட்டும்
உன் பேச்சும்
சோகம் கூட
சுகமாகலாம்
சிலருக்கு
கற்றுக்கொண்டேன்
உன்னிடமிருந்து
தொலைத்த உறவை
எண்ணி
புதிதாய்
பிறந்த
உறவுகளை
ஒட்டாமல் தவிர்க்கிறாய்
குயில் பாட்டு
பிடிக்காதவறில்லை
உன்னையும்
பிடிக்காதவறில்லை
இவ்வுலகில்


