பலநாள் இரவில் என் தூக்கத்தை
ஆக்ரமித்தவள் நீயே
என் காதலை சொல்ல எத்தனித்து
வார்த்தை வர மறுத்து என்னை நானே
வெறுத்த நாட்கள் ஏராளம்
காதல் சொல்ல வாங்கிய மலர் கூட
மனம் மாறி மணம் வீச தவறலாம்
ஆனால் என் காதல் என்றும் மாறாதே
என் மௌனம் சொல்லாத காதலை
என் வார்த்தைகள் தான் சொல்லிடுமோ
ஓயாமல் ஆர்ப்பரிக்கும் அலைகடல்
போன்றதல்ல என் காதல்
பொக்கிஷம் பல உடன் இருந்தும்
அமைதியாய் இருக்கும் நடுக்கடல் போல
என் காதல்
தொலைபேசி அழைப்பு ஒலிக்கும் போதெல்லாம்
உன் முகம் வந்து வந்து போகிறது
அரட்டை அரங்கத்தில் ஓசை இல்லா பல குரல் கேட்பினும்
உன்னிடம் இருந்து வரும் ஒரு குறுந்செய்திக்கு
காத்திருப்பதே சுகமாகி போனதெனுக்கு
என் இதயத்தை உன்னிடம் கொடுத்துவிட்டேன்
அன்பே என்று நீ
என் இதயத்தில் இருப்பதை என்று நீ அறிவாயோ ?!
என் காதல் அது நீ உணரும் வரை
சுகமான வலி மட்டும் மிச்சம் !

No comments:
Post a Comment