அழகான மாலை வேளையில்
பள்ளி முடிந்து வந்து வீட்டின்
முற்றத்தில் அமர்ந்த வேளையில்
என் மடியில் வந்தமர்ந்த
அழகான உயிர் நீ
வண்ணம் பல கொண்டிருக்கிறாய்
நீ பல மனங்கள்
கொள்ளை கொண்டிருக்கிறாய்
சிறகு விரித்து நீ பறக்கையில்
உன் பின்னே பறக்குமே என்
இரு கண்கள்
தொட்டாலே ஒட்டிக்கொள்ளும்
என் கைகளில் உன் வண்ணங்கள்
பேசாமலே என் மனதில்
ஒட்டிக்கொண்ட சிறு கள்ளி நீ
பட்டம் போல் என் மனது உன் பின்னால்
பறப்பதால் தானோ
உன் பெயர்
பட்டாம்பூச்சி

No comments:
Post a Comment