இயற்கைக்கு என்ன கோபமோ
அவ்வப்போது சீறி கொல்கிறது மனிதனை
ஏழை விவசாயியும், மீனவனும்
இயற்கையே உன்னை நம்பி இருப்பவர்கள்
உன்னை தொழுபவர்கள்
தினம் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது அவன் குடும்பம்
ஒருவேலை உணவு உண்ணவே
கடலுக்கு சென்ற கணவன் வீடு திருப்புவானோ என
உறக்கம் தொலைத்து காத்திருப்பாள் அவன் வரவை
எதிர்நோக்கி கரையில் அவன் மனைவி
சீற்றம் மிக்க கடல் அலை அவனை உள்ளிழுத்து விடுமோ
இல்லை
தமிழ் மீனவன் தானே என கடலில் எல்லை வகுத்த
மிருக்கத்தின் துப்பாக்கிக்கு இறையாவானோ ?
நித்தம் நித்தம் இயற்கையை நம்பி வாழ்பவன் அவன்
செயற்கையாய் பல தடைகள் உருவாக்குபவர் மத்தியில்
இயற்கையே உனக்கும் ஏன் அவன் மேல் கோபம்
"ஓகி" புயலாய் வந்து ஓங்கி அடித்திருக்கிறாய்
உன்னால் எப்போதும் அதிகம் பாதிக்கபடுவது
அவர்களே
மீனவர்களின் உயிரை விட பெரியது இடைதேர்தல்
என வாக்காளர் பெயர் பட்டியல் சரி பார்க்க செல்லும்
அரசியல்வாதிகள் இருக்கும் இந்நாட்டில்
இறந்தவர்களின் பெயர் பட்டியலில் தன் உறவுகளின்
பெயர் இருக்கா என பார்க்கும் அவலம் மீனவனுக்கு
இதோ இந்தஇன்னல்களுக்கிடையேயும் பணம்
பார்க்க நினைக்கும் ஈன பிறவிகளும் உண்டு
அதே சமயம் உதவ ஜாதி, மத, இன வேறுபாடின்றி
உதவிகரம் நீட்டிய நல் உள்ளங்களும் உண்டு மறுப்பதிற்கில்லை
முல்லைக்கு தேர் தந்தவன் பாரி
மயிலுக்கு போர்வை தந்தவன் பேகன் போல
இன்னும் இடர் வந்தால் உதவும் பெயர் சொல்லா வள்ளல்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்
பல மாதமாக தலைவிதியை எண்ணி தலைநகரில்
போராடும் ஏழை விவசாயின் செய்திகூட
100 வது நாள் ஓடும் சினிமாவின் கேளிக்கை செய்தி
போலவே கடக்கிறது
400 பேரின் மரணமும் நம்மை ஒரு நிமிட செய்தியாகவே
கடப்பது வேதனை.
இயற்கையை செயற்கையால் வெல்ல நினைக்கும்
மனிதனுக்கு இயற்கை அவ்வப்போது சினம் கொண்டு
பாடம் எடுக்கிறது
மண்ணை தெய்வமாக நினைக்கும் விவசாயியையும்
கடலை தெய்வமாக நினைக்கும் மீனவனையும்
காக்க இயற்கையே உன்னை விட
துணை உண்டோ !!!